ஆறாயிரப்படி
Jump to navigation
Jump to search
ஆறாயிரப்படி அல்லது ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம் என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு எழுதப்பட்ட முதல் உரைநடை (வியாக்கியானம்). இதை திருக்குருகைப்பிரான் பிள்ளான் என்பவர் இயற்றினார்.தமிழ்ச் சமய நூல்களுள் முதன் முதலில் எழுதப்பட்ட உரைநடை நூல் எனும் சிறப்பு இந்நூலுக்கு உண்டு.[1] இந்நூல் தமிழும் வைணவமும் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுள்ளது.
ஒரு படி என்பது 32 எழுத்துகளைக் குறிக்கும். 6000 படிகள் உள்ளதால் இந்நூல் ஆறாயிரப்படி எனப் பெயர் பெற்றது.