ஆறாம் சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா 2007
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆறாம் சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா ரொறன்ரோ, கனடாவில் 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் திகதி அன்று சுயாதீன கலைத் திரைப்பட இயக்கத்தினரால் நடத்தப்பட்டது. இவ்விழாவில் 22 தமிழ்க் குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டன. பன்னிரண்டு குறுந்திரைப்படங்கள் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டு விமர்சகர் தேர்வில் பி. எஸ். சுதாகரனின் கதவுகள், பாஸ்கரின் நதி, நிரோஜன் சிவஹரியின் வினை போன்ற திரைப்படங்கள் தேர்வு செய்யப்பெற்று இவற்றுள் வினை திரைப்படம் கேடயம் வென்றது. நதி திரைப்படம் போட்டி நடுவர்களின் பரிசு பெற்றது. வி. ரவியின் கண்ணால் காண்பதெல்லாம், எஸ். எம். தனபாலனின் மௌன சுமைகள் , அருண் சிவகுமாரனின் அஃகம், ஆகிய குறுந்திரைப்படங்களும் திரையிடப்பட்டன.