ஆர். அபிலாஷ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆர். அபிலாஷ் (பிறப்பு: 1980) தமிழக எழுத்தாளர். புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை, ஆகியன எழுதி வருகிறார். 2014ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமியின் யுவ புரஸ்கார் விருதை “கால்கள்” என்ற புதினத்திற்காகப் பெற்றவர்[1].

வாழ்க்கைக் குறிப்பு

கல்வி

ஆர். அபிலாஷ் கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தில் பி.என். ராமசந்திரன், வல்சலாகுமாரி ஆகியோருக்குப் பிறந்தார். இந்து வித்யாலயாவிலும், தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்து, நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறித்துவ கல்லூரியில் இளங்கலை ஆங்கிலமும் (1998-2001), சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலை ஆங்கிலமும் (2002-04) படித்துப் பட்டம் பெற்றார்.

பணி

2005 இல் பாளையங்கோட்டையில் உள்ள பி.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் சிலகாலம் மாலைமலர், பி.ஐ பப்ளிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 2009 முதல் 2012 வரை சென்னை குருநானக் கல்லூரியிலும், 2012 முதல் 2013 வரை எ. எம். ஜெயின் கல்லூரியிலும் ஆங்கில பேராசிரியராக பணியாற்றினார். இதன் பின் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

படைப்புகள்

ஆர். அபிலாஷ் 2007 முதல் இடைநிலை, சிறுபத்திரிகைகளான உயிர்மை, அமிர்தா, தாமரை, புதிய காற்று, புதிய பார்வை, தமிழ் பெமினா, காட்சிப்பிழை, அந்திமழை ஆகியவற்றில் கட்டுரை, சிறுகதை, கவிதை, மொழியாக்கம் ஆகிய படைப்புகளை வெளியிட்டு வருகிறார். 2014ஆம் ஆண்டு இவரது நாவலான “கால்கள்” சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருதை வென்றது.

புத்தகங்கள்

  • இன்றிரவு நிலவின் கீழ் (ஹைக்கூ மொழியாக்கம்) - 2010 - உயிர்மை
  • கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள் - கட்டுரைத் தொகுப்பு, 2011 - உயிர்மை
  • கால்கள் (நாவல்) - 2012 - உயிர்மை
  • புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன் - 2013 - உயிர்மை
  • இன்னும் மிச்சமுள்ளது உனது நாள் - 2014 - உயிர்மை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆர்._அபிலாஷ்&oldid=27502" இருந்து மீள்விக்கப்பட்டது