ஆரையூர் அருள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மூ. அருளம்பலம்
முழுப்பெயர் மூத்ததம்பி
அருளம்பலம்
பிறப்பு 19-09-1949
ஆரையம்பதி,
மட்டக்களப்பு,
இலங்கை
மற்ற பெயர்கள் ஆரையூர் அருள்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
கலைஞர்
கல்வி மட்டக்களப்பு
சிவாநந்தா
தேசியப்
பாடசாலை
பணி ஆசிரியர்,
பாடசாலை அதிபர்


மூ. அருளம்பலம் (பிறப்பு: செப்ரெம்பர் 19, 1949) என்பவர் ஆரையூர் அருள் என்ற பெயரில் எழுதி வரும் இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளரும், கலைஞரும் ஆவார். 1960 முதல் கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு, கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற பல துறைகளில் இவரது ஆக்கங்களும் செயற்பாடுகளும் அமைந்துள்ளன.[1]

வாழ்க்கைக் குறிப்பு

அருளம்பலம் தனது ஆரம்பக் கல்வியை ஆரைப்பற்றை இ.கி.மி.த.க.பாடசாலையிலும், உயர்கல்வியை மட்டக்களப்பு சிவானந்தா தேசியப் பாடசாலையிலும் கற்றார். ஆசிரியராகப் பயிற்சி பெற்று முதலாம் தர இலங்கை அதிபராகப் பணியாற்றினார்.[1] இவரது எழுத்துகள் இலங்கையின் பிரபலமான பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளியாகின. பல ஒலிப்பேழைகளுக்கு வரியெழுதி வெளியிட்டார்.[1] பக்தி இலக்கிய வகையைச் சேர்ந்த இறையின்பப் பாவாரம் என்ற 742 பக்கங்களைக் கொண்ட பெருங் கவிதை நூல் ஒன்றை வெளியிட்டார். மொத்தம் 3010 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.[2][3]

எழுதிய நூல்கள்

  • பேச்சியம்பாள் பாடல்கள் (2001)
  • மட்/புதுக்குடியிருப்பு கற்பரசி கண்ணகி அம்பாள் பாடல்கள் (2002)
  • புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் பாடல்கள் (2002)
  • கல்லடி - உப்போடை - நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பேச்சியம்பாள் பாடல்கள் (2010)
  • ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் சிதானந்த தபோவனம் ஸ்தாபகர் ஓங்காரானந்த சரஸ்வதி சரிதம் (2010)
  • பேச்சியம்பாளின் அவதாரமும் ஆலயமும் (2012)
  • “கிராமத்து உள்ளங்கள்” நாட்டார் இலக்கியம் (2013)[4]
  • “இறையின்பப் பாவாரம்” (பக்தியிலக்கியம், 2016)[2]

விருதுகள்

  • ‘கூத்துக்கலைஞன்‘ (மண்முனைப் பற்று சாகித்திய விழா, 1997)[1]
  • ‘நாட்டுக்கூத்துக் கலைஞன்‘ (ஜோசப் பரராஜசிங்கம் புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலயத்தில் வழங்கியது, 2002).[1]
  • ‘கீர்த்தி சிறி‘ தேசிய விருது (முன்னாள் பிரதி நீதியமைச்சர் புத்திரசிகாமணி வழங்கியது, 2009)[1]
  • ‘கலைஞானி‘ (ஆரையம்பதி மகாவித்தியாலய நட்புறவுக் குழு வழங்கியது, 2009)[1]
  • ‘முதலமைச்சர் விருது‘ (கிழக்கு மாகாணசபை கிராமிய கலைத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக வழங்கியது, 2010)[5]
  • ‘கலாபூசணம்‘ தேசிய விருது இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களம் வழங்கியது, 2010)[1]
  • ‘இறைஞான தேசிகர்‘ (இராமகிருஷ்ண மிசன் தலைவர் சுவாமி கபாலீசுவரானந்தா வழங்கியது, 2011)[1]
  • ‘சாதனையாளர்‘ விருது (ஆரையம்பதி சமூக அபிவிருத்தி அமைப்பு வழங்கியது, 2012)[1]

மேற்கோள்கள்

[நூலகம்]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.9 "ஆரையூர் அருள்". Archived from the original on 2021-10-22. பார்க்கப்பட்ட நாள் 2020-05-31.
  2. 2.0 2.1 இறையின்ப பாவாரம் ஒரு வரலாற்று பொக்கிசம் , தமிழ்மணி அகளங்கன், ஆகத்து 20, 2019
  3. ஆரையூர் அருள் அவர்களின் இறையின்பப் பாவாரம் நுால் வெளியீட்டு விழா , தமிழ்சிஎன்என், சனவரி 17, 2017
  4. நூலறிமுகம், அட்டாளச்சேனை எஸ். எல். மன்சூர்
  5. தமிழ் இலக்கிய விழா 2010
"https://tamilar.wiki/index.php?title=ஆரையூர்_அருள்&oldid=2443" இருந்து மீள்விக்கப்பட்டது