ஆரையம்பதி கந்தசுவாமி கோவில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கந்தசுவாமி கோயில்
கந்தசுவாமி கோயில் is located in இலங்கை
கந்தசுவாமி கோயில்
கந்தசுவாமி கோயில்
கந்தசுவாமி கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:7°40′07″N 81°43′45″E / 7.668496°N 81.729297°E / 7.668496; 81.729297Coordinates: 7°40′07″N 81°43′45″E / 7.668496°N 81.729297°E / 7.668496; 81.729297
பெயர்
பெயர்:கந்தசுவாமி கோயில், ஆரையம்பதி
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:கிழக்கு மாகாணம்
மாவட்டம்:மட்டக்களப்பு மாவட்டம்
அமைவு:ஆரையம்பதி
கோயில் தகவல்கள்
மூலவர்:வேல்
சிறப்பு திருவிழாக்கள்:புரட்டாதிப் பூரணைக்கு முந்தைய 10 நாட்கள் திருவிழா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:குறைந்தது 400 ஆண்டுகள்.
அமைத்தவர்:காத்தான் (வேடன்)

கந்தசுவாமி கோயில் (முருகன்) இலங்கையின் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு நகருக்கண்மையுள்ள ஆரையம்பதி கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோவில் ஆகும். ஆரையம்பதி கிராமத்தில் பெரிய கோயில் என்ற சிறப்பு பெயரால் இக் கோயில் அழைக்கப்படுகிறது.

வரலாறு

16 ஆம் நுாற்றாண்டின் முற்பகுதியில் காத்தான் என்ற வேடுவத்தலைவன்[1] வழிபட்ட வேல் முகுர்த்தம் கொண்டு உருவான கோயில். கோயில் குளத்தில் அமைந்திருந்த காசிலிங்கேஸ்வரர் கோயில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆரையம்பதிக்கு இடம்பெயர்ந்து காத்தானின் வேல் முகூர்த்தத்தை மூலவராக கொண்டும் காசிலிங்கேஸ்வரர் கோயிலின் சிதைவுகளை கொண்டும் பெரிய அளவில் கட்டுவிக்கப்பட்ட கோயில்.

திருவிழாக்கள்

புரட்டாதி மகோற்சவம்

புரட்டாதி பூரணைக்கு முன்வரும் பத்து தினங்கள் கொண்டு மகோற்சவம் இடம்பெறும். இங்கு ஒவ்வெரு திருவிழாவையும் உபயம் செய்பவர்களை ”பாகைக்காரர்கள்” என அழைப்பார்கள்.

  • கொடியேற்றம்
  • 1 ஆம் திருவிழா
  • 2 ஆம் திருவிழா
  • 3 ஆம் திருவிழா
  • பூம்பந்தல் திருவிழா
  • மாம்பழத் திருவிழா
  • வேட்டைத் திருவிழா
  • சப்புறத் திருவிழா
  • தேர்த் திருவிழா
  • தீர்த்தம்
  • கொடியிறக்கம்
  • பூங்காவனத் திருவிழா

கந்தசஷ்டி விரதம்

முருகனுக்கே உரித்தான கந்தசஷ்டி விரதம் ஆறுநாட்கள் அனுஷ்டிக்கப்பட்டு இறுதி நாள் சூரன் போர் இடம்பெறும். பின்னர் திருக்கல்யாண உற்சவம் இடம்பெறும். இவ் விரத உற்சவத்தை “ஆறுகாட்டி குடி“ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர்.

குமாராலய தீபம்

கார்த்திகை குமாராலய தீப உற்சவம் இடம்பெறும். இவ் உற்சவத்தை “மன்றுளாடி குடி“ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர்.

திருவாதிரை

நடேசருக்கு சபையில் மார்கழி திருவாதிரை உற்சவம் பத்து நாட்கள் இடம்பெற்று இறுதியில் சமுத்திர தீர்த்தமும் அதன் பின்னர் பொன்னுாஞ்சல் திருவிழாவும் இடம்பெறும். இவ் உற்சவத்தை “பாலசிங்க ரெட்ண குடி“ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர்.

தைப்பூசம்

தைப்பூச உற்சவம் இடம்பெற்று மறுநாள் சமுத்திர தீர்த்தம் நடைபெறும். இவ் உற்சவத்தை “புலவனார் குடி“ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர்.

மாசி மகம்

மாசி மகத் திதியில் நடேசருக்கு உற்சவம் இடம்பெற்று மறுநாள் சமுத்திர தீர்த்தமும் அன்னதானமும் இடம்பெறும். இவ் உற்சவத்தை “வங்காள குடி“ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர்.

பங்குனி உத்திரம்

முத்துக்குமார சுவாமிக்கு பங்குனி உத்திர தினத்தில் உற்சவம் இடம் பெற்று சமுத்திரதீர்த்தம் அதனை தொடர்ந்து அன்னதானம் இம்பெறும். இவ் உற்சவத்தை “முதலித்தேவன் குடி “ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர்.

சித்திரை சித்திரை

முத்துக்குமார சுவாமிக்கு உற்சவம் இடம்பெற்று. சமுத்திர தீர்த்தமும் சித்திரைகஞ்சி பிரசாதமும் இடம்பெறும். இவ் உற்சவத்தை “வீரமாணிக்கன் குடி “ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர்.

ஆனி உத்திரம்

நடேசருக்கு உற்சவம் இடம்பெற்று சமுத்திர தீர்த்தம் நடைபெறும். உற்சவத்தை “திருவிளங்கு குடி “ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர்.

ஆடிப்பூரம்

அம்மனுக்கு உற்சவம் இடம்பெற்று சமுத்திர தீர்த்தம் நடைபெறும். உற்சவத்தை “பத்தினியாச்சி குடி “ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர்.

ஆவணி மூலம்

நடேசருக்கு உற்சவம் இடம்பெற்று சமுத்திர தீர்த்தம் நடைபெறும். உற்சவத்தை “அலறித்தேவன் குடி “ மரபினர் முன்னின்று நடத்தி வைப்பர்.

ஏனைய உற்சவங்கள்

  • தைப் பொங்கல்
  • கார்த்திகை நட்சத்திர விரதம் (வருடத்தில் 12 மாதங்களிலும்)
  • கிருஷண ஜெயந்தி
  • கம்சன் கதை உற்சவம்
  • விநாயசர் சஷ்டி விரதம்
  • மாணிக்கவாசகர் குரு பூசை
  • விநாயகர் சஷ்டி விரதம் 21 நாட்கள்
  • கேதார கௌரி விரதம் 21 நாட்கள்
  • தித்திரை வருடப்பிறப்பு பூசை
  • தீபாவளி பூசை

தான்தோன்றிஸ்வரர் ஆலய தொடர்புகள்

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயிலுக்கும் இவ் கோயிலுக்கும் இடையிலான பாரம்பரியமான தொடர்புகள் காணப்படுகின்றன.

  • இவ் ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேரோட்டத்தின் அன்று இவ் ஊர் குருகுல தலைவர் (கோயில் வண்ணக்கர்) தலைமையில் வேல்தாங்கி பாதயாத்திரை செல்லுதல்.
  • தான்தோன்றீஸ்வரர் தேருக்கான வடக்கயிற்றை ஆரையம்பதி குருகுலத்தோர் பூட்டிக்கொடுத்தல்.
  • கந்தசுவாமி கோயில் திருவிழா காலங்களில் தான்தோன்றீஸ்வரர் கோயில் வண்ணக்கர் மற்றும் கோயில் தொண்டர்கள் வருகைதரல்.
  • கந்தசுவாமி கோயில் திருவிழாக்குரிய தொண்டுகளை மேற்கொள்ளும் பணி செய்தல்.
  • தான்தோன்றீஸ்வரர் திருவிழாவுக்கு முன்னர் கோயில் நுழைவாயிலில் கொத்துப்பந்தல் அமைத்துக்கொடுத்தல்.(இவ்நடைமுறை கோபுரம் கட்டியதன் பின்னர் வழக்கற்று போய்விட்டது)

இவ் நடைமுறைகள் மகோன் வகுத்த நியதிப்படி நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பில் சாதி அமைப்பில் முக்குகர் மற்றும் குருகுலத்தோர் ஆகிய சாதிகளுக்கு இடையிலேனா பரஸ்பர உறவுகளுக்கான சம்பிர்தாயம் என கருதப்படுகின்றது.

மேற்கோள்கள்

  1. வீ.சீ.கந்தையா (1983) "மட்டக்களப்பு சைவக் கோவில்கள்

வெளி இணைப்புகள்