ஆய்தக்குறுக்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆய்தக்குறுக்கம் என்பது ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதாகும்.[1] ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம்.[2]

ல ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்
                                      - நன்னூல்.97

எ.கா.: முள் + தீது = முஃடீது[3]

மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின் கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதைக் காணலாம். இதுவே ஆய்தக் குறுக்கமாகும்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஆய்தக்குறுக்கம்&oldid=13468" இருந்து மீள்விக்கப்பட்டது