ஆயிரத்தில் இருவர் (புதினம்)
ஆயிரத்தில் இருவர் , சுஜாதாவால் எழுதப்பட்ட குறும்புதினம். பின்னர் கிழக்குப் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
படிமம்:ஆயிரத்தில் இருவர்.jpg | |
நூலாசிரியர் | சுஜாதா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | கிழக்குப் பதிப்பகம் [1] விசா பப்ளிகேஷன்ஸ்[2] |
வெளியிடப்பட்ட நாள் | 2011 |
ISBN | 978-81-8493-612-4 |
கதைக் கரு
வரதட்சிணைக் கொடுமையால் தனது மகள் கொல்லப்பட்டதாகவும், அது சமையலறை விபத்து என்று தனது மருமகன் ஜோடித்து விட்டதாகவும் ஒரு வயதானவர் வக்கீல் கணேஷிடம் முறையிடுகிறார். ஐ. ஏ . எஸ். அதிகாரியான தனது மருமகன் மீது வழக்குத் தொடுக்கச் சொல்கிறார். வழக்கை விசாரிக்க செல்கையில் கணேஷும் வசந்தும் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் சந்திக்கச் சென்ற பெண்ணும் தாக்கப்படுகிறாள். வன்முறையின் காரணம் என்ன என்று கணேஷும் வசந்தும் ஆராயும் பொழுது மாமனாரும் , மருமகனும் சமாதானம் ஆகிவிடுகிறார்கள். திடீர் சமரசத்திற்குக் காரணம் என்ன என்று செல்லும் கதை.
கதை மாந்தர்கள்
- கணேஷ்
- அனிதா
- சதாசிவம்
- நடேசன்
- ப்ரதிமா
- மகேந்திரன்
- கோவிந்தராஜன்
- ரஞ்சனி ஷர்மா மற்றும் பலர்.