ஆம்ஸ்டல்
Jump to navigation
Jump to search
| ஆம்ஸ்டல் Amstel | |
|---|---|
| படிமம்:Amsterdam Amstel 12.jpg ஆம்ஸ்டர்டாமின் நகர மையம் | |
| படிமம்:Location Amstel with Drechtkanaal.PNG ஆம்ஸ்டல் ஆற்றின் அமைவிடம் கருநீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. | |
| அமைவு | |
| நாடு | நெதர்லாந்து |
| மாகாணம் | வட ஆலந்து, தென் ஆலந்து, உட்ரெக்ட் |
| நீர் வாரியம் | ஆம்ஸ்டல், கூய் என் வெச்ட் |
| நகராட்சிகள் | நியுவ்கூப், டி ரோண்டே வெனன், உய்த்தோர்ன், ஊடர் ஆம்ஸ்டல் ஆம்ஸ்டெல்வீன், ஆம்ஸ்டர்டாம் |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | ஆர்கனல் / டிரெக்ட் |
| • அமைவு | நியூவீன், தென் ஆலந்து |
| • ஆள்கூறுகள் | 52°12′24″N 4°44′05″E / 52.20667°N 4.73472°E |
| முகத்துவாரம் | ஐஜே |
• அமைவு | ஆம்ஸ்டர்டாம், வட ஆலந்து |
• ஆள்கூறுகள் | 52°22′08″N 4°53′33″E / 52.36889°N 4.89250°E |
| நீளம் | 31 km (19 mi) |
ஆம்ஸ்டல் (Amstel, இடச்சு: [ˈɑmstəl] (Audio file "Nl-Amstel.ogg " not found)) நெதர்லாந்து நாட்டின் வட ஆலந்து மாகாணத்தில் உள்ள ஒரு ஆறாகும்.[1] இது ஆர்கனால் மற்றும் நோர்த்வாட்டின் டிரெக்ட்டில் இருந்து ஆரம்பித்து உய்த்தோர்ன், ஆம்ஸ்டெல்வீன் மற்றும் ஓடர்கெர்க் ஆன் டி ஆம்ஸ்டெல் ஆகியவற்றைக் கடந்து ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஐஜே வளைகுடாவில் வந்து கலக்கிறது. இதன் மூலம் இந்த நதி ஆம்ஸ்டெல் எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நதியில் ஆண்டுதோறும் சுதந்திர தினக் கொண்டாட்டம், படகு வலிப்புப் போட்டி, படகு அணிவகுப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
வரலாறு
ஆம்ஸ்டெல் கிமு 1050 இல் உருவாக்கப்பட்ட ஒரு நன்னீர் ஆறாகும்.[2]
கலைஞர்களின் படைப்புகள்
ஆம்ஸ்டெல் நதி பல கலைஞர்களால் சித்தரிக்கப்பட்டுள்ளது, அவற்றுள்:
- ஏர்ட் வான் டெர் நீர் (1603–1677)
- ரெம்ப்ராண்ட் (1609–1669)
- வில்லம் விட்சன் (1860–1923)
- ஜார்ஜ் ஹென்ட்ரிக் பிரீட்னர் (1857–1923)
- பியட் மாண்ட்ரியன் (1872–1944)
மேற்கோள்கள்
- ↑ Ahmed, Shamim (10 July 2015). "Amsterdam • Venice of the North". theindependentbd.com. The Independent. Archived from the original on 15 June 2022. Retrieved 15 June 2022.
- ↑ Jerzy Gawronski & Peter Kranendonk, "The River Amstel", Municipality of Amsterdam. Retrieved on 1 November 2020.