ஆனையூர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆனையூர் (ஆங்கிலம்:Anaiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இது 18 வார்டுகளுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது. 2015--க்குப் பிறகு ஆனையூர் நகராட்சி, மதுரை மாநகராட்சியின் மண்டல எண் 1-இல், 3-வது வார்டு பகுதியாக செயல்படுகிறது.[1]

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 63,917 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 32,114 ஆண்கள், 31,803 பெண்கள் ஆவார்கள். ஆனையூரில் 1000 ஆண்களுக்கு 990 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட குறைவானது. ஆனையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 91.67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.42%, பெண்களின் கல்வியறிவு 87.92% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. ஆனையூர் மக்கள் தொகையில் 6,166 (9.65%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 916 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு குறைவானதாக உள்ளது.

2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 85.09% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 8.81% இஸ்லாமியர்கள் 5.90% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். ஆனையூர் மொத்த மக்கள்தொகையில் பட்டியலினத்தவர்கள் 10.98%, பழங்குடியினர் 0.32% ஆக உள்ளனர். ஆனையூரில் 16,351 வீடுகள் உள்ளன.[2]

மேற்கோள்கள்

  1. "WARD-NO-3-ANAIYUR". Archived from the original on 2020-06-27. பார்க்கப்பட்ட நாள் 2020-06-06.
  2. Anaiyur Population Census 2011பார்த்த நாள்: டிசம்பர் 11, 2015
"https://tamilar.wiki/index.php?title=ஆனையூர்&oldid=41892" இருந்து மீள்விக்கப்பட்டது