ஆதிக்கம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆதிக்கம்
இயக்கம்வி. சி. குணனாதன்
தயாரிப்புநல்லை ஆனந்தன்
கதைவி. சி. குணநாதன்
இசைசந்திரபோஸ்
நடிப்பு
ஒளிப்பதிவுதர்மா
படத்தொகுப்புஎன். ஆர். பாபு
கலையகம்ஸ்ரீ எஸ்ஆர்என் புரடக்சன்
வெளியீடுசூலை 8, 2005 (2005-07-08)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆதிக்கம் (aathikkam) 2005 இல் வெளிவந்த தமிழ் திகில் திரைப்படமாகும். வீ. சி குகநாதன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ரஞ்சித், விக்னேஷ், மோனல் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்க அவர்களுடன் இணைந்து சத்திய பிரகாஷ், சந்திர லக்ஸ்மன், புதுமுக நடிகர் அருணா கிரிதர், இந்து ஆகியோரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை குறைந்த முதலீட்டில் நல்லை ஆனந்தன் தயாரித்திருந்தார். சந்திரபோஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 2005 ல் இது வெளியிடப்பட்டுள்ளது.[1][2][3][4]

கதைச்சுருக்கம்

நாகா (ரஞ்சித்) ஒரு போக்கிரி. அவன் இரகசியமாக சப்- இன்ஸ்பெக்டர் பாண்டியனிற்கு (சத்திய பிரகாஷ்) வேலை செய்து கொண்டிருந்தான். அவன் காவல் அதிகாரிகளின் தீர்க்க முடியாத பிரச்சனைகளிற்கு தீர்வினை வழங்கினான். ஒரு நாள் ஊடகவியலாளர் லக்ஷ்மி பாண்டியனிற்கும் போக்கிரிக்கும் இடையிலான செயற்பாடு குறித்து ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்துகிறார். இது அனைத்து இடங்களிலும் வேகமாக பரவி முற்பக்க அட்டையிலும் இடம்பெறுகிறது. இதனால் பாண்டியனிற்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காமல் போகின்றது. இதனால் நாகா, லக்ஷ்மியை கடத்துவதோடு பாண்டியன் லக்ஷ்மியை கற்பழித்து விடுகிறான். பாண்டியன் லக்ஷ்மியை கொல்லும்படி நாகாவிடம் சொல்லிவிட நாகாவோ அவளை விட்டுவிடுகின்றான்.

பல நாட்களுக்கு பிறகு லக்ஷ்மி மனநலம் குன்றியவளாக மாறுகிறாள். மேலும் பாண்டியன் கற்பழித்ததன் மூலம் தேவி (பேபி அக்ஷயா) எனும் குழந்தையும் பெற்றெடுக்கிறாள். குரு (விக்கினேஷ்) ஒரு வர்த்தக நடிகர். குருவிற்கு சினிமாவில் நடிகராகும் ஆசை இருந்தது. ஒரு நாள் குரு அவனது நண்பி ஜூலி (அருணா கிரிதர்) அவரது இல்லத்தில் இறந்து கிடப்பதை அவதானிக்கிறான். ஆனால் காவல் அதிகாரிகளோ குருவே ஜூலியை கொன்றான் என எண்ணி அவனை கைது செய்கின்றனர். ஜான்சி (மோனல்) சிறு வயதில் இருந்தே குருவை காதலித்து வந்தாள். எனவே அவனை விடுவிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டாள். தேவி தனது தந்தையை பற்றி தெரிந்து கொள்ள தனது தாய் மற்றும் தாத்தாவை விட்டு விலகுகிறாள்.

நாகா அவனுடைய பெயரை துரை என்று மாற்றியிருந்தான். அவன் அவனுடைய செயல்கள் தவறானவை என்றும் உணர்ந்திருந்தான். நாகா, தேவியோடு சேர்கின்றான். அத்தோடு ஜான்சி நாகாவின் வீட்டில் குற்றவாளிகள் இருப்பதை கண்டு பிடிக்கிறாள். அதன் பிறகு பாண்டியன் உதவி ஆணையாளராக மாறியிருப்பது நாகாவிற்கு தெரிய வருகிறது. அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.

நடிகர்கள்

  • ரஞ்சித் - நாகா/ துரை
  • விக்னேஷ் - குரு
  • மோனல் - ஜான்சி
  • சத்திய பிரகாஷ் - பாண்டியன்
  • சந்திர லக்ஸ்மன் - பிரியா
  • அருணா கிரிதர் - ஜூலி
  • இந்து - லக்ஷ்மி
  • கே. ராஜன் - ஜான்சியின் தந்தை
  • அருள்மணி - பிரியாவின் தந்தை
  • கே. நடராஜ் - லட்சுமியின் தந்தை
  • பேசன்ற் ரவி - சிம்ஹா நாயுடு
  • காதல் சுகுமார் - கோவிந்தன்
  • போண்டா மணி - மணி
  • கொட்டச்சி
  • சிசர் மனோகர்
  • ஜெமினி ஸ்ரீதர்
  • பேபி அக்சயா - தேவி
  • உசா பிரியா - பார்வதி
  • சுவாமிநாதன்

இசை

சந்திர போஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 2005 ல் இசை வெளியிடப்பட்டுள்ளது. வைரமுத்து மற்றும் முகமது மேதா இத்திரைப்படத்திற்கான பாடல்வரிகளை எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஆதிக்கம்_(திரைப்படம்)&oldid=30539" இருந்து மீள்விக்கப்பட்டது