ஆதவ் அர்ஜுனா
இந்தக் கட்டுரை கொண்டுள்ள உள்ளடக்கம் விளம்பரத்தைப் போல் காணப்படுகிறது.. |
| ஆதவ் அர்ஜுனா | |
|---|---|
| பிறப்பு | ஏப்ரல் 12, 1982 திருச்சி, தமிழ்நாடு |
| தேசியம் | இந்தியர் |
| பணி | தொழில்முனைவோர், விளையாட்டுத்துறை நிர்வாகி |
| அமைப்பு(கள்) | வாய்ஸ் ஆப் காமன்ஸ் |
| அரசியல் கட்சி | தவெக |
| வாழ்க்கைத் துணை | டெய்சி மார்டின் |
| உறவினர்கள் | ஜி. திலகவதி (பெரியம்மா) |
| வலைத்தளம் | |
| aadhavarjuna | |
ஆதவ் அர்ஜுனா ("Aadhav Arjuna") என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் "அரைஸ் கேப்பிட்டல்" என்ற நிறுவத்தின் நிர்வாக இயக்குநராகவும் 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் 2023ஆம் ஆண்டு முதல் இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் "வாய்ஸ் ஆப் காமன்ஸ்" என்ற அரசியல் வியூக நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார்.[1][2] இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து, 2024 திசம்பரில் கட்சியிலிருந்து விலகினார்.
இளமைக்காலம்
இவர் 1982ஆம் ஆண்டு 12 ஏப்ரலில் திருச்சியில் ஒரு வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே தனது தாயாரை இழந்தார். இவரது ஆரம்பக் கல்வியை ஒய். டபள்யூ. சி. ஏவிலும் பள்ளிக் கல்வியை திருச்சி இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியிலும் படித்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்து அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[3][4] பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகளான டைய்சி மார்ட்டினை திருமணம் செய்தார்.
விளையாட்டுத்துறை
2016ஆம் ஆண்டு வரை இவர் கூடைப்பந்தாட்ட வீரராக விளையாடி வந்தார். பின்னர் நிர்வாகத்தில் கவனம் செலுத்தி 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
தொழில்
இவர் "அரைஸ் கேப்பிட்டல்" என்ற சிறுநிதி நிறுவத்தின் நிர்வாக இயக்குநராக இருந்துவருகிறார். இந்த நிறுவனத்திற்காக இவரது மாமனார், மார்ட்டினின் நிறுவனமான மார்ட்டின் ஹாப்பி ஹோம் பிரைவேட் லிமிடட் நிறுவனம் மூலம் 82.5 கோடி கடன் பெற்றுள்ளார்.[6] இவரின் மாமனாரான பரிசு சீட்டு அதிபர் மார்ட்டின் மீது வருமானவரித்துறை மற்றும் அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற வேளையில் ஆதவ் அர்ஜுனா அலுவலகங்களிலும் சோதனையினை மேற்கொண்டனர்.[7]
அரசியல் வாழ்க்கை
2011 முதல் 2016 வரை மு. க. ஸ்டாலின் மேற்கொண்ட நமக்கு நாமே பயணத்தின் ஏற்பாட்டாளர்களுள் ஒருவராக இருந்த அர்ஜுனா[8] 2016இல் சுனில் கனுகோலுவுடன் இணைந்தும், 2021இல் பிரசாந்த் கிஷோருடன் இணைந்தும் திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.[8] 2023இல் திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு அக்கட்சியில் இணைந்து துணைப் பொதுச்செயலாளரானார். 2024 திசம்பரில் கட்சியின் தலைமை அறிவுறுத்தலை மீறியதாகக் கட்சியை விட்டு ஆறு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.[9] பின்னர் 2024 திசம்பர் 14ஆம் தேதியன்று விசிகவிலிருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்தார்.[10] அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேர்ந்தார்.
விருதுகள்
2022 செப்டம்பரில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் நிகழ்வில் சிறந்த ஒருங்கிணைப்பாளர் விருதினைப் பெற்றார்.[11] விளையாட்டுத் துறையில் இவரது சிறந்த நிர்வாகத்திறனுக்கு விகடன் நம்பிக்கை விருது 2022 மேடையில் கௌரவிக்கப்பட்டார்.[12] கலாட்டா கிரோன் 2022 இல் விளையாட்டு ஐகான் என்ற விருதையும் பெற்றார்.[13]
மேற்கோள்கள்
- ↑ "இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராக ஆதவ் அர்ஜூனா தேர்வு,". தினத்தந்தி. Retrieved 6 July 2024.
- ↑ "செய்தி வெளியீடு எண் : 2113". செய்தி மக்கள் தொடர்புத் துறை. https://cms.tn.gov.in/cms_migrated/document/press_release/pr241122_2113.pdf. பார்த்த நாள்: 20 December 2024.
- ↑ "Expelled by South Asian University, Scholar Heads to Oxford for MPhil". The Wire. Retrieved 29 February 2024.
- ↑ Staff, T. N. M. (23 June 2023). "TN Dalit student successfully crowdfunds MPhil at Oxford". The News Minute (in ஆங்கிலம்). Retrieved 29 February 2024.
- ↑ "Basketball Federation of India president underscores need to modernise coaching methods". Hindustan Times (in ஆங்கிலம்). 3 December 2023. Retrieved 29 February 2024.
- ↑ "Arise Investments & Capital Pvt Ltd". arisecapital.in (in ஆங்கிலம்). Retrieved 2024-12-16.
- ↑ "லாட்டரி மன்னன் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுன் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு! - Director of Arise industries". ஈடிவி பாரத். https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/it-raid-in-adhav-arjun-belonging-director-of-arise-industries/tamil-nadu20230425070349059059227. பார்த்த நாள்: 20 December 2024.
- ↑ 8.0 8.1 "பிரசாந்த் கிஷோர் பாதையைப் பின்பற்றுகிறாரா? ஆரம்பம் முதல் தற்போது வரை... யார் இந்த ஆதவ் அர்ஜுனா?". புதிய தலைமுறை. https://www.puthiyathalaimurai.com/tamilnadu/who-is-aadhav-arjuna-and-what-does-he-had-done-in-tn-politics-so-far. பார்த்த நாள்: 10 December 2024.
- ↑ "Aadhav Arjuna: `ஆதவ் கருத்து கட்சியின் நலன் எனத் தோன்றினாலும்..!’ - இடை நீக்கம் செய்த திருமாவளவன்". விகடன். https://www.vikatan.com/government-and-politics/governance/thol-thirumavalavan-on-aadhav-arjunas-expelled-from-the-vck-party. பார்த்த நாள்: 10 December 2024.
- ↑ "ஆதவ்".
- ↑ "செய்திக்குறிப்பு 1570". தமிழ்நாடு அரசு. Retrieved 10 December 2024.
- ↑ "VIKATAN AWARDS டீம் தேர்வுல அதிகார மட்டத்தோட தலையீடு நிறைய இருக்கு - ஆதவ் அர்ஜூனா". யூட்டியூப். Retrieved 10 December 2024.
- ↑ "ஒரே கனவு , புதிய வரலாறு Sports Icon Aadhav Arjuna..! Galatta Crown Award 2022". யூட்டியூப். Retrieved 10 December 2024.