ஆணழகன் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search


ஆணழகன்
இயக்கம்தியாகராஜன்
தயாரிப்புஎஸ். பாலாஜி
கதைபாபு - கோபு (வசனம்)
திரைக்கதைதியாகராஜன்
இசைஇளையராஜா
நடிப்புபிரசாந்த்
சுநேஹா
வடிவேலு
சார்லி
சின்னி ஜெயந்த்
கே. ஆர். விஜயா
வைஷ்ணவி
மணிவண்ணன்
ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
லூசு மோகன்
தாமு
பயில்வான் ரங்கநாதன்
வெண்ணிறாடை மூர்த்தி
காந்திமதி
குமரிமுத்து
வி. கே. ராமசாமி
டெல்லி கணேஷ்
ஒளிப்பதிவுவி. ரங்கா
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
வெளியீடு11 மார்ச் 1995
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆணழகன் (Aanazhagan) 1995 ஆம் வெளிவந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். தியாகராஜன் இயக்க, பிரசாந்த், சுநேஹா, மணிவண்ணன், கே.ஆர். விஜயா, வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1] சித்ரம் பலேரே விசித்ரம் என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.

இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.[2]

கதைச்சுருக்கம்

ராஜா ( பிரசாந்த் ), சுதாகர் ( சார்லி ), ராகவா ( சின்னி ஜெயந்த் ), மருது ( வடிவேலு ) ஆகிய நால்வரும் நல்ல நண்பர்கள். இவர்கள் குடியிருக்கும் வீட்டிலிருந்து துரத்தப்படுவதால், வாடகைக்கு புதிய வீடு தேடி அலைகிறார்கள். இவர்கள் பிரம்மச்சாரிகள் என்பதால், வாடகைக்கு வீடு கொடுக்க அனைவரும் தயங்கினர். கே. ஆர். விஜயா வீட்டில் வாடகைக்கு இடம் இருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் ஒரு குடும்பத்திற்கு மாட்டும் தான் வாடகைக்கு வீடு கொடுப்பார் என்பதால், இந்த நான்கு நண்பர்களும் ஒரே குடும்பத்தை தேர்ந்த நபர்கள் போல் வேடம் பூணுகிறார்கள். அதில் ராஜா, லட்சுமி என்ற பெயருடன் பெண் வேடமிட்டு சார்லியின் மனைவியை போல் நடிக்கிறான். அந்த வீட்டு எஜமானியின் மகளான ப்ரியாவை ராஜா விரும்புகிறான். அவ்வாறாக ஒரு சமயத்தில், லட்சுமி கர்ப்பமாக இருப்பதாக அந்த எஜமானியிடம் பொய் சொல்கிறார்கள். அதனால், பெண் வேடத்தில் இருக்கும் லட்சுமிக்கு வளைகாப்பு விழாவை நடத்துகிறார் அந்த எஜமானி. பின்னர், கர்ப்பமாக இருக்கும் லட்சுமி, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். ராஜாவின் ஆள் மாறாட்டம் என்னவானது? எஜமானி கண்டுபிடித்தாரா? ராஜா ப்ரியாவை திருமணம் செய்தானா? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.

நடிகர்கள்

தயாரிப்பு

நடிகர் பிரசாந்த் இந்த படத்தின் தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[3]

1995 இல் புதிதாக உருவாக்கப்பட்ட ஜே.ஜே. ஸ்டுடியோஸில் உருவாக்கப்பட்ட முதல் படம் ஆணழகன் ஆகும்.[4]

இசை / பாடல்கள்

இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். இதில் உள்ள 8 பாடல்களுக்கும் வாலி வரிகள் எழுதினார்.

ட்ராக் பாடல் பாடகர்(கள்)
1 ஆச்சா பாச்சா மனோ , சித்ரா
2 அருள் கண் பார்வை சித்ரா
3 ஏலே மச்சி மனோ , சித்ரா
4 கண்ணே இன்று மனோ , சுவர்ணலதா
5 கொஞ்சும் புறா மனோ , எஸ். ஜானகி
6 நில்லாத வெண்ணிலா இளையராஜா , சுவர்ணலதா
7 பூச்சூடும் உமா ரமணன், சுவர்ணலதா
8 வீட்டை விட்டு துரத்தி மனோ

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆணழகன்_(திரைப்படம்)&oldid=30521" இருந்து மீள்விக்கப்பட்டது