ஆசியம்மாள்
Jump to navigation
Jump to search
ஆசியம்மாள் (Asiammal) என்பவர் தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயக் குறிச்சியில் பிறந்தவர்[1]. இந்தியக் காவல் பணிக்கான குரூப்-1 அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர். இவர், தமிழக உளவுத்துறையில் காவல்துறைத் தலைவராக (ஐஜி) பணி நியமனம் செய்யப்பட்டுள்ள முதல் பெண்மணி ஆவார்[2].
படிப்பு
1994 ஆம் ஆண்டு ஆசியம்மாள் அறிவியல் முதுநிலை (எம்.எஸ்சி.) பட்டம் பெற்றார். அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்பத்தில் முதுநிலை (எம்.டெக்.) பட்டமும், தங்கப்பதக்கமும் பெற்றவர்.[3] இவர் வணிக மேலாண்மை நிர்வாகவியலில் முதுநிலை (எம்.பி.ஏ) பட்டமும் பெற்றவர்.[4]
மேற்கோள்கள்
- ↑ https://www.dinamani.com/tamilnadu/2022/jan/09/first-female-ig-in-intelligence-kanimozhi-mp-congratulations-3770926.html
- ↑ https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/tamilnadu-police-history-first-women-appointment-ig-intelligence-r5fmfn
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2022-01-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220109174108/https://www.inspiringindianmuslimwomen.org/inspirations-from-states/tamil-nadu.
- ↑ https://mdnews.live/tamil/appointment-of-female-officer-as-intelligence-ig-in-police-history-who-is-she