அ ஆ இ (சிற்றிதழ்)
அ ஆ இ நெதர்லாந்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களால் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் காலாண்டு சிற்றிதழாகும்.[1] புலம்பெயர் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழை வளர்க்கவும், தமிழ் மொழியைப் பாதுகாத்துக் கொள்ளவும், தமிழ் கலை, கலாசாரங்களைப் பேணிக் கொள்ளவும் பலவிதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த அடிப்படையிலேயே இவ்விதழும் வெளிவந்துள்ளது.
முதல் இதழ்
முதல் இதழ் சுவடு 1, டிசம்பர் 1989ல் வெளிவந்துள்ளது.
பணிக்கூற்று
அரசியல் ஆய்வு இலக்கிய காலாண்டு இதழ்
முகப்பட்டை
சண்முகம் சிவலிங்கத்தின் ‘மீண்டும் எழுந்திருக்கையில்’ என்ற கவிதையில் ஒரு சில வரிகள் முகப்பட்டையில் இடம்பெற்றிருந்தன.
சிறப்பு
கையெழுத்து வடிவில் இதழாக அச்சாகியிருந்தது. இடைக்கிடையே தமிழ் தட்டச்சு எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டிருந்தன.
முதல் இதழில் ஆசிரியர் குழுவின் கருத்து
“இது அரசியல் ஆய்வும், இலக்கிய இதழின் முதல் சுவடு. எமது எண்ணம் உணர்வுகளின் ஆரம்பம். கையெழுத்து வடிவில் சஞ்சிகையாக உருப்பெற்றுள்ளது. நிகழ்காலத்தில் நெதர்லாந்திலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது”.
உள்ளடக்கம்
கவிதைகள், கவிதை விமர்சனங்கள், அரசியல் ஆய்வுகள், இலக்கிய சந்திப்பு நிகழ்வுகள் ஆகியன முதல் இதழில் இடம்பெற்றிருந்தன. முதல் இதழ் 24 பக்கங்களைக் கொண்டிருந்தது.
பிந்திய இதழ்கள்
கையெழுத்திலும், தட்டச்சிலும் வெளிவந்த இந்த இதழில் பிந்திய இதழ்கள் தமிழ் கணினியில் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தன. இலங்கை அரசியல் நிலைகளை இவை அதிகளவில் அலசி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புத்தகத்தை இணையத்தில் படிக்க
அ.ஆ.இ - நெதர்லாந்து[தொடர்பிழந்த இணைப்பு]
மேற்கோள்கள்
- ↑ "அ.ஆ.இ - நெதர்லாந்து". படிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 4 மே 2016.[தொடர்பிழந்த இணைப்பு]