அ. மணிசேகரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அ. மணிசேகரன் (பிறப்பு: பிப்ரவரி 28 1955) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் அரசாங்க உயர் அதிகாரியாவார். மேலும் மலேசியாவின் மேடை நாடகங்களின் தன்மை, வரலாறு பற்றி ஆராய்ந்து எழுதியுள்ள "மலேசியாவில் மேடை நாடகங்கள் நூல்" அத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1973 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கட்டுரைகள், வானொலி நாடகங்கள், மேடை நாடகங்கள் மற்றும் திரைப்படத்துறை பற்றியும் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "மலேசியாவில் மேடை நாடகங்கள்" (1986)
  • "திரையில் வளர்ந்த திலகம்" (எம்.ஜி.ஆர். பற்றிய நூல், 1991).

பரிசில்களும், விருதுகளும்

  • சிறந்த கட்டுரையாளர் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1983)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=அ._மணிசேகரன்&oldid=6637" இருந்து மீள்விக்கப்பட்டது