அ. கிருஷ்ணன்
Jump to navigation
Jump to search
அ. கிருஷ்ணன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1967–1971 | |
| பின்னவர் | கோ. செபமலை |
| தொகுதி | மங்களூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 அக்டோபர் 1921 தி. இளமங்கலம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | விவசாயி |
அ. கிருஷ்ணன் (A. Krishnan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தி. இளமங்கலம் கிராமத்தினைச் சேர்ந்தவர். திட்டக்குடி உயர் தொடக்கப் பள்ளியிலும், ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மங்களூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
1967
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | அ. கிருஷ்ணன் | 34,538 | 56.67% | ||
| காங்கிரசு | பி. வேதமாணிக்கம் | 21,669 | 35.56% | ||
| சுயேச்சை | எம். கட்டிமுத்து | 2,204 | 3.62% | ||
| சுயேச்சை | வி. கிருஷ்ணன் | 845 | 1.39% | ||
| சுயேச்சை | கே. இராயர் | 654 | 1.07% | ||
| சுயேச்சை | வி. துரைசாமி | 562 | 0.92% | ||
| சுயேச்சை | பி. முத்துக்கண்ணு | 471 | 0.77% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,869 | 21.12% | |||
| பதிவான வாக்குகள் | 60,943 | 70.42% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 90,557 | ||||
| தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 115.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.