அ.மு.சரவண முதலியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சரவண முதலியார் என்பவர் தமிழில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற அ.ச.ஞானசம்பந்தரின் தந்தை ஆவார். சைவமும் தமிழும் தழைக்கச் செய்த அறிஞர்களுள் இவரும் ஒருவர்.

பிறப்பும் வாழ்வும்

இவர் 1887 ஆம் ஆண்டு முத்துசாமி- சீதை அம்மாளுக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர். இவர் பிறந்த ஊர் அரசங்குடி. இவர் அறுவை வாணிகம் புரிந்து, லால்குடிக்குக் குடியேறினார்.

ஆற்றிய பணிகள்

1928 ஆம் ஆண்டு முதல் செட்டிநாட்டிலுள்ள கீழைச் சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கலாசாலைத் தலைமைப் பொறுப்பை ஏற்றார். 1930 ஆம் ஆண்டு லால்குடி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், பின்னர் திருச்சி மாவட்ட பள்ளிகள் பலவற்றில் தமிழாசிரியராகவும் பணியாற்றி 1943 இல் பணி ஓய்வு பெற்றுள்ளார்.

படைப்புகள்

தமிழ்ப் புலமைப் பெற்ற இவர், அறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டாருடன் இணைந்து, திருவிளையாடல் புராணத்திற்குப் பேருரை எழுதியுள்ளார். எழுதிய நூல்கள்:

  • அமுதடி அடைந்த அன்பர்
  • இரு பெருமக்கள்
  • கட்டுரைப் பொழில்.

பட்டங்கள்

திருச்சி சைவ சித்தாந்த சபை சார்பில் இவருக்கு, பெருஞ் சொல் விளக்கனார் எனும் பட்டம் வழங்கப்பட்டது.

உசாத்துணை

1) தமிழ்ப் பொழில், இதழ், கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை- 1958. 2) சரவண முதலியார், கட்டுரைப் பொழில், கங்கைப் புத்தக நிலையம்-2005. 3) பெரியபெருமாள், " தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் " மதி நிலையம்-2004.

"https://tamilar.wiki/index.php?title=அ.மு.சரவண_முதலியார்&oldid=18341" இருந்து மீள்விக்கப்பட்டது