அஸ்வதி மேனன்
அஸ்வதி மேனன் | |
---|---|
பிறப்பு | கொச்சி, கேரளா, இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2000–2002 2017–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | விகாஷ் |
அஸ்வதி மேனன் (Aswathi Menon) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றுவதற்காக அறியப்படுகிறார். 2000ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான சத்யம் சிவம் சுந்தரம் படத்தில் அறிமுகமானார்.[1][2]
ஆரம்ப கால வாழ்க்கை
அஸ்வதி, இந்தியாவின் கேரளாவின் எர்ணாகுளத்தில் ஜெய்கோபால் மேனன் - வினிதா ராவ் ஆகியோருக்குப் பிறந்தார். துபாயின் வர்கி குழும பள்ளிகளில் தனது பள்ளிப்படிப்புக்குப் பிறகு , கேரளாவில் எர்ணாகுளம் புனித தெரசாள் கல்லூரியிலும், தேவாராவின் புனித இருதயக் கல்லூரியிலும் ஆங்கில இலக்கியத்தில் முதுகலையை முடித்தார். திரைப்பட நடிப்புக்காக அபுதாபியில் உள்ள 'நியூயார்க் திரைப்பட நிறுவனத்தில் ' சான்றிதழ் பட்டம் பெற்றார். [3] [4]
தொழில்
இவர், துபாயிலுள்ள வர்கி சர்வதேச தனியார் பள்ளியில் பயின்றார். அங்கு இவர் முதலில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் இவர் தென்னிந்தியாவில் மலையாளம், தமிழ் போன்ற மொழிப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். குஷி (2000) என்ற படத்தில் விஜய்க்கு நாயகியாக நடிக்க படத் தயாரிப்பு நிறுவனம் இவரை அணுகியது. ஆனால் தனது படிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியிருந்ததால் இந்த வாய்ப்பை நிராகரித்தார்.[5]
இவரது முதல் தோற்றம் சத்யம் சிவம் சுந்தரம் படத்தின் மூலம் இருந்தது. இதைத் தொடர்ந்து சம்போ மகாதேவா, சாவித்ரியுடே ஆரஞ்சனம், ஒன்னமான் , தமிழ் திரைப்படமான தென்காசிப்பட்டிணம் (2002) போன்ற படங்களில் நடித்தார். ஒரு இடைவெளிக்குப் பிறகு, இவர் 2017ஆம் ஆண்டு ரோல் மாடல்கள், லாபிங்க் அபார்ட்மென்ட் நியர் கிரிநகர் ஆகிய படங்களின் மூலம் திரும்பினார். பின்னர் டிரான்ஸ் [6] , சூன் போன்ற ஆகிய படங்களிலும் தோன்றினார். இவர் "கலிங்கா" என்ற இசைக்குழுவோடு தொடர்பு கொண்டுள்ளார். துபாயில் நாடகம்ர், கலை முதலியவற்றில் ஈடுபட்டார். துபாயில் உள்ள ஒரு பெறுநிறுவனத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றினார்.
சான்றுகள்
- ↑ "Aswathi Menon Biography". Film Beat. https://www.filmibeat.com/celebs/aswathi-menon.html. பார்த்த நாள்: 29 August 2018.
- ↑ "Walking back into the limelight: Aswathy Menon on the comeback trail". manoramaonline.com. https://english.manoramaonline.com/entertainment/interview/2018/03/18/walking-back-into-the-limelight-aswathy-menon-on-the-comeback-trail.html. பார்த்த நாள்: 29 August 2018.</ref
- ↑ "RETURN OF THE LONG-LOST PRINCESS—ASWATHI MENON". Rage N You இம் மூலத்தில் இருந்து 29 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180829212324/http://ragenyou.com/2017/09/30/return-of-the-long-lost-princess-aswathi-menon/.
- ↑ "Pularvela". Manorama News. https://www.manoramanews.com/daily-programs/pulervala/2017/08/25/aswathi-menon-make-a-big-come-back-to-malayalam-cinema.html.</ref
- ↑ https://web.archive.org/web/20041117070038/http://www.chennaionline.com/reeltalk/mar123.asp
- ↑ "Aswathi Menon returns to M'wood with Role Models". Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/aswathi-menon-returns-to-mwood-with-role-models/articleshow/56272672.cms.</ref