அழகிரி விசுவநாதன்
Jump to navigation
Jump to search
அழகிரி விசுவநாதன் (Alagiri Viswanathan; மார்ச் 2, 1931 - திசம்பர் 23, 2018[1]) தமிழக மூத்த எழுத்தாளர் ஆவார். இவர் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் பணி செய்து வந்தவர். இரயில்வேத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னரும், தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.
பிறப்பு
அழகிரி விசுவநாதன் மார்ச் 2, 1931 இல் தஞ்சாவூரில் பிறந்தார். இவரது பெற்றோர் அழகிரிசாமி - சீதாலட்சுமி அம்மாள் ஆகியோர் ஆவார்.[2]
எழுத்துப்பணி
இவருடைய எழுத்து பொன்விழா கண்டதாகும். இவருடைய முதல் சிறுகதை 1955 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதற்குப் பிறகு தமிழகத்தின் அனைத்து இதழ்களிலும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள நூல்களில் சிறுகதை, கவிதை, புதினம், நாடகம் போன்றவை அடங்கும்.
பெற்ற விருதுகள்
- சிறுகதைச்செம்மல் (மூத்த குடிமக்கள் பேரவை, தஞ்சாவூர், 2000)
- இலக்கிய மாமணி (தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பேரவைகளின் கூட்டமைப்பு, தஞ்சாவூர் 2013)
எழுதியுள்ள நூல்கள்
அழகுமலைப் பதிப்பகம், தஞ்சாவூர் வெளியீடுகள்
- ஆயிரம் ரூபாய் நோட்டு (சிறுகதைகள்)
- கமலி (நாவல்) [1]
- இந்த எறும்புகள் (கவிதைகள்)
- அந்தி வானம் (மறுபதிப்பு) (நாவல்)
- மறதி வாழ்க (நாடகங்கள்)
- தமிழ் மொழி சீர்திருத்தம் வேண்டும்
- கண்ணெதிரே ஒரு மோகினிப் பிசாசு
பிற பதிப்பகங்கள்
- நன்றிக் கடன் (சிறுகதைகள்) (கங்கை புத்தக நிலையம், சென்னை) [2]
- இரயிலே நில்லு (சிறுகதைகள்) (குமரி பதிப்பகம், நாகப்பட்டினம்)
- அப்பா இது நியாயமா (சிறுகதைகள்) (கிரிஜா பதிப்பகம், தஞ்சாவூர்) [3]