அலுகுறும்பர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

அலுகுறும்பர் (Alu Kurumbas) என்னும் பழங்குடியினர் தமிழகப் பழங்குடிகள் வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நீலகிரி மலையில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மூதாதையர்கள் பழைய பல்லவ மரபினை சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர். இவர்கள் கன்னடம் கலந்த கலப்பு மொழி ஒன்றைப் பேசிவருகின்றனர். இவர்கள் பெட்டகுறும்பர் எனவும், முள்ளு குறும்பர் என்றும் அழைக்கப்படுகின்றன்ர். யானைகளை பிடிப்பது இவர்களது தொழில் ஆகும். யானைகளின் எண்ணிக்கையை கணக்கிடுவோர் இவர்களை நாடிபோகின்றனர். ஏனெனில் இவர்கள் யானைகளை இனம் பிரித்து அடையாளம் காட்டுகின்றனர்.

வாழ்கை நிலை

பாரம்பரியமாக ஆலு குரும்பர்கள் வேட்டையாடிகளும், தோட்டக்கலை வல்லுநர்களும் ஆவர். இவர்கள் தங்கள் முக்கிய உணவுப் பயிர்களான கேழ்வரகு, சாமை, தினை, கம்பு போன்ற சிறுதானியங்களையும், காராமணி போன்ற பருப்பு வகைகளை பயிரிட்டு வழ்ந்து பெரும்பாலும் தன்னிறைவு பெற்றவர்களாக வாழ்ந்துவந்தனர். ஆனால் பிற்காலத்தில் இவர்களின் கிராமங்களுக்கு அருகிலுள்ள காடுகள் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்ட பிறகு இவர்களின் தற்சார்பு வழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. வேளாண் நில உரிமையாளர்களாக இருந்து திடீரென்று தோட்டத் தொழிலாளிகளாக மாறிப்போயினர்.[1]

ஓவியப் பாரம்பரியம்

நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில் எழுத்துப்பாறை என்ற இடத்தில் 3,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் உள்ளன. இது முதன்முதலில் 1984 ஆம் ஆண்டு அமெரிக்க மானுடவியலாளர் ஆலன் சாக்கரெல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வாளர்கள் அவை வரலாற்றுக்கு முந்தையவை, அதாவது புதிய கற்காலத்தைச் சேர்ந்தவை என்று கூறுகின்றனர்.

ஆலு குறும்பர்கள் அந்த தளத்தில் உள்ள 'மானுட உருவத்தை' தங்கள் 'மூதாதையர் ஆவி' என்று வணங்குகிறனர். மேலும் ஆண்டுதோறும் சடங்கு வழிபாட்டில் அந்த உருவத்தை மீண்டும் தொட்டு அல்லது மீண்டும் வரைவதன் மூலம் அதை மீண்டும் புத்துயிர்பெற முடியும் என்று நம்புகிறனர்.[2]

இவர்களின் ஓவியங்கள் பெரும்பாலும் இவர்களின் வாழ்க்கை முறையில் உள்ள சடங்கு அம்சங்கள் சித்தரிக்கின்றன. இயற்கை, இலைகளாலும் மரத்தாலும் ஆன வீடுகள், உணவு தானியங்களை உலர்த்தும் பெண்கள், தேன் சேகரிக்கும் ஆண்கள், திருமணச் சடங்குகள், கோழிகள், காட்டில் சுற்றித் திரியும் விலங்குகள் ஆகியவை இந்த அற்புதமான கலை பாணியில் இடம்பெற்றுள்ள கருப்பொருள்களில் சிலவாகும்.[3]

மேற்கோள்கள்

  1. Durai, Nagarajan R. (2023-04-18). "Alu Kurumbas' tribal art depicts their connection with nature". Frontline (in ஆங்கிலம்). Retrieved 2025-02-28.
  2. "Ritual and decorative wall paintings of the Alu Kurumba community: An art traced back to prehistory – Tamil Nadu – Tribal Cultural Heritage in India". indiantribalheritage.org. Retrieved 2025-02-28. {{cite web}}: no-break space character in |title= at position 102 (help)
  3. Durai, Nagarajan R. (2023-01-03). "Alu Kurumba art depicts the tribes' connection with nature". Village Square (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-02-28.
"https://tamilar.wiki/w/index.php?title=அலுகுறும்பர்&oldid=257336" இலிருந்து மீள்விக்கப்பட்டது