அறுகாலி
Jump to navigation
Jump to search
| அறுகாலிகள் புதைப்படிவ காலம்: | |
|---|---|
| படிமம்:Diptera 01gg.jpg | |
| A flesh-fly | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| துணைத்தொகுதி: | அறுகாலி Latreille, 1825
|
| வகுப்பு மற்றும் வரிசை | |
|
வகுப்பு பூச்சியினம் | |
அறுகாலி (Hexapoda) என்பது விலங்கியலில், கணுக்காலித் தொகுதியின் ஒரு துணைத் தொகுதியாகும். இத்துணைத்தொகுதி உயிர்களுக்கு மூன்று இணை கால்கள் உள்ளன. இவை பொதுவாக சிறகுள்ள மற்றும் சிறகற்ற உயிரிகளாகவுள்ளன. சிறகுள்ளவைகள் பூச்சியினம் என்றும் மற்றும் சிறகில்லாதவைகள் கொலம்பொலா, ப்ரோடுரா, மற்றும் டைப்லுரா என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
புறத்தோற்றம்
முன்புற தலை, மார்பு பகுதி, மற்றும் பின்புற வயிறு என்று மூன்று பகுதிகள் அறுகாலிகளின் உடலில் உள்ளன. உணர்கொம்புகள், தாடை, உதடு போன்றவை பொதுவாக தலைப்பகுதியில் உள்ளன. மார்பு பகுதியில் மூன்று இணைகால்கள் மற்றும் சிறகுகள் உள்ளன.
- ↑ Gaunt, M.W.; Miles, M.A. (1 May 2002). "An Insect Molecular Clock Dates the Origin of the Insects and Accords with Palaeontological and Biogeographic Landmarks". Molecular Biology and Evolution 19 (5): 748–761. doi:10.1093/oxfordjournals.molbev.a004133. பன்னாட்டுத் தர தொடர் எண்:1537-1719. பப்மெட்:11961108. http://www.mbe.oupjournals.org/cgi/content/abstract/19/5/748.