அறப்பளீசுர சதகம்
அறப்பளீசுர சதகம், 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்றான சதகம் வகையைச் சார்ந்தது. பொதுவாகச் சதகம் என்பது 100 பாடல்களைக் கொண்டதாகும்.
இயற்றியவர்
இதனை இயற்றியவர் அம்பலவாணக் கவிராயர் என்பவர் ஆவார். இவர் சீர்காழி அருணாசலக் கவிராயரின் மகனாவார். இது தவிர இந்நூலாசிரியர் குறித்த செய்திகள் ஏதும் அறிய இயலவில்லை. [1]
கொல்லிமலை இறைவன்
அறப்பளீச்சுர சதகம், கொல்லி மலையில் அமைந்துள்ள அறப்பள்ளி ஈசுவரன் மேல் பாடப்பெற்றதாகும். இந்நூல் எழுந்த காலம் 18ஆம் நூற்றாண்டு ஆகும். [1]
அமைப்பு
இந்நூல் 100 பாடல்களைக் கொண்ட சிறந்த ஒரு நீதி இலக்கியமாகும்.
சிறப்பு
ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும். சிறந்த மாணவன் எப்படித் திகழவேண்டும். ஒரு நல்ல நகரம் எவ்வாறு அமைதல் வேண்டும். நல்ல அரசும், அதற்கு ஆலோசனை வழங்குபவர்களும் எவ்வாறு இருக்கவேண்டும். உடன் பிறப்பு என்பவர் எப்படி தியாக உள்ளத்தோடு திகழ வேண்டும். பொருள் சேர்க்கும் வழிமுறையானது எப்படி நல்வழியில் அமைய வேண்டும். நல்லோர்களின் இயல்பினையும், வாழ்க்கை நிலையாமையையும், வறுமையின் கொடுமை, நல்வினை, தீவினை செய்தோர் குறித்தும், ஒரு சிறந்த மருத்துவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்தும் சிறந்த பல கருத்துக்கள் பாடல்களாக இந்நூலில் காணப்படுகின்றன. [1]