அர்ஜூன் ராம்பால்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அர்சூன் ராம்பால்


பிறப்பு நவம்பர் 26, 1972 (1972-11-26) (அகவை 53)
சபல்பூர், இந்தியா
தொழில் விளம்பரப் படத் தோற்ற நடிகர், நடிகர், தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 2001 – இன்று வரை
துணைவர் மெகர் செசியா

அர்சூன் ராம்பால், (Arjun Rampal) பாலிவுட் படங்களில் நடிக்கும் இந்திய நாட்டினைச் சார்ந்த நடிகர் மற்றும் வடிவழகர் ஆவார். இவர் 1972 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று பிறந்தார்.

திரைப்படத்துறை வாழ்க்கை

இவர் முதன் முதலாக 2001 ஆம் ஆண்டில் வெளியான அசோக் மெக்தா இயக்கிய மோக்சா என்ற படத்தில் நடித்தார். சுனில் செட்டி மற்றும் அப்தாப் சிவ்தாசனியுடன் இணைந்து இரண்டாவதாக நடித்த, ப்யார் இசிக் அவுர் முகப்பத், என்ற படம் முதலில் வெளியானது. பாக்சு ஆபீசில் இவ்விரு படங்களும் தோல்வியுற்றன. இருப்பினும் இவ்விரு படங்களிலும் அவருடைய நடிப்பைத் திறனாய்வாளர்கள் வெகுவாக பாராட்டினார்கள். 2002 ஆம் ஆண்டில், இன்டர்நேசனல் இந்தியன் பிலிம் அகாடமி என்ற அமைப்பு இவருக்கு 2002 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த அறிமுக நடிகனுக்கான விருதை வழங்கியது.

இவர் அறிமுகமானதில் இருந்து, தொடர்ந்து நிதானமாக ஆன்கேன் (2002 ஆம் ஆண்டு), தில் கை தும்காரா (2002 ஆம் ஆண்டு), யகீன் (2005 ஆம் ஆண்டு), ஏக் அசினபீ (2005 ஆம் ஆண்டு) போன்ற பல படங்களில் நடித்தார். ஆனால் இவருடைய தில் கை தும்காரா (2002 ஆண்டு), யகீன் (2005 ஆம் ஆண்டு) மற்றும் ஏக் அசினபீ (2005 ஆம் ஆண்டு) படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.

இவர் சாருக்கான், ராணி முகர்சி, சைப் அலி கான், பிரீத்தி சிந்தா மற்றும் பிரியங்கா சோப்ரா போன்ற திரைப்பட நட்சத்திரங்களுடன் இணைந்து டெம்ப்டேசன்சு 2004 என்ற கலை நிகழ்ச்சியிலும் தோன்றினார்.

2006 ஆம் ஆண்டில் இவர் பல-நட்சத்திரங்கள் நடித்த கபி அல்விதா நா கெகனா என்ற படத்தில் கௌரவ வேடத்தில் நடித்தார். மேலும் டான் - தி சேசு பிகின்சு அகைன், என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் பங்கேற்றார். இப்படம் 1978 ஆம் ஆண்டில் அமிதாப் பச்சன் நடித்த டான் என்ற படத்தின் மறுதயாரிப்பாகும். மூலப்படத்தில் பிரான் நடித்த சசுசீத் என்ற வேடத்தில் ராம்பால் தோன்றினார். அதன் மூலப்படத்தைப் போலவே இப்படமும் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

அதற்குப் பிறகு இவர் சொந்தமாக ஐ சீ யு (2006 ஆம் ஆண்டு) என்ற படத்தைத் தயாரித்து நடிக்க முடிவெடுத்தார். இப்படம் 2006 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று வெளியானது. இவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான சேசிங் கணேசா பிலிம்சு நிறுவனம் படத்தை தயாரித்தது. இவரது மனைவி, மெகர் செசியா இப்படத்தின் துணை தயாரிப்பாளராவார். இப்படத்தில் ராம்பால், விபாசா அகர்வால், சோனாலி குல்கர்னி மற்றும் போமன் இரானி ஆகியோர் நடித்தனர். இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான சாருக்கான் மற்றும் ரித்திக் ரோசன் ஆகியோர் கௌரவ வேடத்தில் தோன்றினார்கள். ஐ சீ யு படம் முழுமையாக லண்டனில் படமாக்கப்பெற்றது. இப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைக்கவில்லை மற்றும் பாக்சு ஆபீசில் தோல்வி அடைந்தது. இருப்பினும், பாராக்கானுடைய படமான ஓம் சாந்தி ஓம் (2007 ஆம் ஆண்டு) படத்தில் வில்லனாக நடித்து நல்ல விமரிசனங்களைப் பெற்றார். இப்படம் பாலிவுட்டின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இன்று வரை இவருடைய மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்து வருகிறது. இப்படத்திற்காக இவர் பல விருதுகளைப் பெற்றார்.

கட்டுடல் கொண்ட இந்த நடிகர், தற்போது உணவு விடுதிகளுக்கு சொந்தக்காரரான ஏ டி சிங்க் என்பவருடன் இணைந்து கூட்டு முயற்சியாக புதுதில்லியில் லாப் லவுஞ் அண்ட் பார்டி என்ற பெயரில் ஒரு புதிய உணவு விடுதி மற்றும் மதுபானக நிறுவனத்தை அண்மையில் திறந்து வைத்தார்.

அர்சூன் ராம்பால், சர் ரிட்லி சுகாட்ட் (கிலேடியேடர் புகழ் இயக்குநர்) தயாரித்த மற்றும் புகழ்பெற்ற சர்வதேச இயக்குநர் சேகர் கபூர் (மிசுடர். இந்தியா, பாண்டிட் க்வீன், எலிசபெத்) இயக்கிய அனைத்துலக சிச்வேப்பெ நிறுவனத்தின் பானங்களுக்கான வணிக விளம்பரத்தில் நிகோல் கிட்மேனுடன் தோன்றினார்.

அண்மையில் இவர் உலகப்புகழ்பெற்ற ஆடைத் தயாரிப்பு நிறுவனமான தாமசு சுகாட் நிறுவனத்தின் வணிகச்சின்னத்தின் தூதராகவும் விளங்குகிறார்.

2010 ஆம் ஆண்டில் இவர் சாருக்கான் மற்றும் குணால் அவ்தானாவுடன் இணைந்து மிகவும் வெற்றிபெற்ற டான் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை பெரிய பச்சனுடன் சேர்ந்து ஏபிசிஎல் புரொடக்சன் நிறுவனத்துக்காக துவங்க உள்ளார். மேலும் அபிசேக் கபூரின் அடுத்த படத்திலும் நடிக்கிறார்.

2008 ஆம் ஆண்டில், அர்சூன் ரிதுபர்னோ கோசு ஆங்கிலத்தில் தயாரித்த கலைவண்ணத்துடன் கூடிய படமான தி லாசிட் லியர் என்ற படத்தில், அமிதாப் பச்சன் மற்றும் பிரீத்தி சிந்தாவுடன் இணைந்து நடித்தார். இப்படத்தின் முதல் காட்சி டொரோண்டோ இன்டர்நேசனல் பிலிம் திரைப்பட விழாவில் காட்டப்பெற்றது. இப்படம் பல இதர திரைப்பட விழாக்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் இந்தியாவில் உள்ள திரை அரங்குகளில் காட்சிக்கு வந்த பின்னால், ராம்பாலின் நடிப்பை போற்றி பலர் விமர்சனம் செய்துள்ளனர். 2008 ஆம் ஆண்டில், ராம்பால் ராக் ஆன்!! என்ற படத்தில் ஒரு முன்னோடி கிதார் இசைக்கலைஞராக நடித்தார். அந்த வேடத்தை விமர்சகர்கள் பெரிதும் பாராட்டினர். மேலும் அத்திரைப்படத்திற்காக பல விருதுகளைப் பெற்றார். அவ்விருதுகளில் பிலிம்பேரின் மிகச்சிறந்த துணை நடிகருக்கான விருதும் அடங்கும்.[1]

2010 ஆம் ஆண்டில் பிரகாசு சாவின் மிகப்பெரும் வெற்றிப்படமான ராசுநீதி எனும் படத்தில் ப்ரித்வி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் இவரது கதாப்பாத்திரத்தின் சித்தரிப்புக்காக விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார்.

சொந்த வாழ்க்கை

அர்சூன் தீயோளில் உள்ள புனித பேட்ரிக் பள்ளியில் படித்தார். மேலும் இவர் புதுதில்லியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இவரது தந்தை அமர்சீத் சிங்க் ராம்பால் மற்றும் தாயார் க்வீன் ராம்பால் ஆவர்.

இவரது தந்தை வழி மற்றும் தாய் வழி தாத்தாகளும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் ஆவர்.

அர்சூன் மற்றும் அவரது இளைய தங்கையான கோமல் ராம்பாலும், தமது தாய் ஆசிரியையாகப் பணியாற்றிய புகழ்பெற்ற கொடைக்கானல் இன்டர்நேசனல் பள்ளியில் படித்தனர்.

அர்சூன் ராம்பால் முந்தைய மிசு இந்தியா மற்றும் உயர்ந்த விளம்பரத்தில் தோன்றும் நடிகையான மெகர் செசியாவை மணந்தார். மேலும் இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுடைய பெயர்கள் மாகிகா, 2002 ஆம் ஆண்டு சனவரி மாதம் அன்று பிறந்தார். மற்றொரு மகள் மைரா, 2005 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் பிறந்தவர் ஆவார்.

மேற்கோள்கள்

  1. "Worldwide Grossers (Figures in INR)". Archived from the original on 2013-01-02. Retrieved 2010-03-03.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அர்ஜூன்_ராம்பால்&oldid=256439" இலிருந்து மீள்விக்கப்பட்டது