அர்ச்சனா சரத்
அர்ச்சனா சரத் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளருமாவார். குழந்தைகள் முதல் பெரியவர் வரை எந்த வகையினரும் விரும்பும் வகையில் எழுதக்கூடிய இவர், பல்வேறு கவிதைகளையும், மின்னல் வேக புனைகதைகளையும் ஆங்கில மொழியில் எழுதியுள்ளார். அவரது முதலாவது நாவலான வேட்டையாடும் பறவைகள் (பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே) 2016 ம் ஆண்டில் உளவியல் குற்ற பின்னணியைக் கொண்டு எழுதப்பட்டது. மிகவும் விறுவிறுப்பான இந்த நாவலின் கதையைத் தழுவி இறை என்ற பெயரில் பிப்ரவரி 2022 இல் ஆஹா தமிழ் இணைய ஒலியொளியோடையில் இணையத் தொடராக வெளியானது.[1] ,இத்தொடரில் தமிழில் பிரபலமான நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். மேலும் ராடன் மீடியாவொர்க்ஸ் தயாரித்துள்ள இதை ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
அர்ச்சனா சரத், தென் தமிழ்நாட்டின் துறைமுக நகரமான தூத்துக்குடியில் பிறந்தவரானாலும், படித்ததும், வளர்ந்ததும் சென்னையில் தான். கெல்லிஸில் உள்ள சிந்தி மாடல் உயர்நிலைப் பள்ளியில் படித்த இவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்ஓபி வைஷ்ணவாகல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். அத்தோடு பட்டய கணக்கியல் படிப்பையும் முடித்துள்ள இவர், தற்போது, குடும்ப நிறுவனமான பி.டி.பொன்னையா & கோவின் பங்குதாரராகவும் உள்ளார்.1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம், தணிக்கை மற்றும் உத்தரவாதம், வரிவிதிப்பு, வணிக உருவாக்கம், வணிக ஆதரவு, வணிக ஆலோசனை மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் சேவைகளை வழங்கி வருகிறது. [2]
பெருநிறுவன வழக்கறிகராகவும், நிறுவன செயலாளராகவும் பணியாற்றி வரும் சரத் என்பவரை மணந்து குடும்பமாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார்கள்.
புத்தகங்கள் மற்றும் வெளியீடுகள்
- வேட்டையாடும் பறவைகள் ; 1 நவம்பர் 2016 அன்று ரீடோமேனியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது; உளவியல் குற்ற பின்னணியைக் கொண்ட நாவல்
- கணிதத்தின் வரலாற்றிலிருந்து கதைகள் - 1 ஜூலை 2018 அன்று ரீடோமேனியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது; கணிதத்தின் வரலாறு, இந்தியாவிலும் மேற்கத்திய உலகிலும் கணிதத்தின் கலை மற்றும் அறிவியலின் பரிணாம வளர்ச்சியின் மூலம் இந்த பயணத்தை உண்மை மற்றும் நிகழ்வுகளைப் பற்றிய கதைகள்: இந்தியாவின் டெஹார்டூனில் நடைபெற்ற வார்த்தைகளின் பள்ளத்தாக்கு சர்வதேச இலக்கிய விழாவில், 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த குழந்தைகள்/இளம் வயது புத்தகம் என்ற விருதைப் பெற்றுள்ளது.[3]
- டிட் ஃபார் டாட்; 2 அக்டோபர் 2017 அன்று ரீடோமேனியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது; பரபரப்பூட்டும் சிறுகதைகளின் தொகுப்பு; கிண்டலிலும் வெளியானது.[4]
- உறங்கும் நாய்கள் ; 14 செப்டம்பர் 2022 அன்று ரீடோமேனியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது; பெண்ணியம், பெண் அதிகாரம், ஆணாதிக்க மனநிலையை நசுக்குதல் மற்றும் எண்ணற்ற உளவியல் சிக்கல்கள் போன்ற பல்வேறு விஷயங்களை ஆராயும் பரபரப்பான புதினம்.
அர்ச்சனா தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி எகனாமிக் டைம்ஸ், தி செபி மற்றும் கார்ப்பரேட் லாஸ் ஜர்னல், தி சிஏ நியூஸ் லெட்டர் போன்ற பத்திரிகைகளிலும் நிதி, வணிகம் மற்றும் தணிக்கை சம்பந்தப்பட்ட தலைப்புகளில் கட்டுரைகளும் எழுதியுள்ளார். [5]
மேற்கோள்கள்
- ↑ Irai Official Teaser | an aha Original Series | Sarath Kumar, Rajesh M Selva | Radaan Mediaworks (in English), retrieved 2022-02-09
- ↑ admin. "P.T.Ponnaiah & Co" (in en-US). http://ptpindia.com/.
- ↑ "The History of Mathematics - Archana Sarat" இம் மூலத்தில் இருந்து 2020-08-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200809023632/https://valleyofwords.org/interview/the-history-of-mathematics-archana-sarat/.
- ↑ "India, a nation of novelists every November" (in en-intl). http://www.radioaustralia.net.au/international/2015-12-21/india-a-nation-of-novelists-every-november/1528396.
- ↑ .