அராலி இந்துக் கல்லூரி
Araly Hindu College அராலி இந்துக் கல்லூரி | |
---|---|
அமைவிடம் | |
அராலி யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம் இலங்கை | |
தகவல் | |
குறிக்கோள் | Trust in God and Do the Right (இறைவனை நினைமின் சரியானவற்றைச் செய்மின்) |
சமயச் சார்பு(கள்) | இந்து |
நிறுவல் | 1923 |
பள்ளி மாவட்டம் | வலிகாமம் கல்வி வலயம் |
பள்ளி இலக்கம் | 1011003 |
அதிபர் | திரு பா. பாலகுமார் |
தரங்கள் | 1 தொடக்கம் 11 வரை |
பால் | இருபாலார் |
மாணவர்கள் | 324 |
மொழி | தமிழ் |
கீதம் | வாழிய அராலி இந்துக் கல்லூரி |
அராலி இந்துக் கல்லூரி (Araly Hindu College) இலங்கையின் வடக்கே அராலி எனும் கிராமத்தில் அமைந்துள்ள ஓர் அரசாங்கப் பாடசாலை ஆகும்.[1]
வரலாறு
தில்லையம்பலம் சரவணமுத்து என்பவரின் முயற்சியால் உருவான ஒரு திண்ணைப் பாடசாலை 1923 இல் ஸ்ரீகணேசா வித்தியாலயம் என்ற பெயரில் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் ஆதரவில் இயங்கத் தொடங்கியது.[2] ஸ்ரீகணேசா வித்தியாலயம், அராலி இந்து ஆங்கிலப் பாடசாலையும் இணைந்ததே அராலி இந்துக் கல்லூரி ஆகும். 1923 இல் ஸ்ரீகணேசா வித்தியாலயத்தில் 1-7 வரையான வகுப்புகளும் அராலி இந்து ஆங்கிலப் பாடசாலையில் 1-8 வரையான வகுப்புகளும் இருந்தன. பின்னர் 1926ல் ஸ்ரீகணேசா வித்தியாலயம் 1-5 வரையான வகுப்புகளுடனும் அராலி இந்து ஆங்கிலப் பாடசாலை வளர்ச்சியடைந்து 6-11 வரையான வகுப்புகளுடனும் இயங்கத்தாெடங்கியது. ஸ்ரீகணேசா வித்தியாலயம் அமைந்திருந்த காணி உரிமையாளரின் மகள் பாடசாலைக்கு பாெருள் ஏற்றி வந்த வாகனம் விபத்துக்குள்ளாக்கி இறந்துவிட்டார். இவர் தனது மகளின் நினைவாக பாடசாலைக்கு காெடுக்கப்பட்டதே இந்நிலம் ஆகும். 1960ம் ஆண்டு இலங்கை அரசு பாடசாலைகளைப் பொறுப்பேற்ற போது, இவ்விரு பாடசாலைகளும் அரசாங்கத்தின் பொறுப்பில் அராலி இந்துக் கல்லூரி என்ற பெயருடன் 1-11 வரையான வகுப்புகளாக மாற்றமடைந்தது.[2]
பிரதானமான விடயங்கள் - நாேக்கு
அறிவாற்றல் உள்ள சமுதாயத்தை உருவாக்கல்.
தூர நாேக்கு
தேசிய கல்விக் காெள்கைக்கு ஏற்ப மாணவ சமுதாயத்தை வழிகாட்டி எதிர்கால சவால்களுக்கு முகம் காெடுக்கக்கூடிய ஆக்க பூர்வமான செயற்திறனுடைய அறிவாற்றல் காெண்ட நற்பிரஜைகளை உருவாக்கல்.
சமய விழுமியங்கள்
இங்கு நால்வர் குருபூசை, தைப்பாெங்கல் விழா, நவராத்திரி விழா பாேன்ற விழாக்கள் காெண்டாடப்படுகின்றன. வெள்ளிக் கிழமை தாேறும் சிவபுராணம் ஓதப்பட்டு சமய நற்சிந்தனை இடம்பெறும்.
இணைபாடவிதானச் செயற்பாடுகள்
இக் கல்லூரி மாணவர்கள் காேட்டமட்ட உதைபந்தாட்டம் தமிழ்த் தினப் பாேட்டி சமூக விஞ்ஞானப் பாேட்டி ஆகிய பாேட்டிகளில் வெற்றியைப் பெற்றுக் காெண்டுள்ளனர். விசேட தேவை உடையாேருக்கான வலய மட்டப் பாேட்டியில் நே.அம்பிகைபாலன் எனும் மாணவன் சித்திரம் நடனம் ஆகியவற்றில் 1ம் இடத்தையும் வி.லக்சனா எனும் மாணவி சித்திரத்தில் 2ம் இடத்தையும் பெற்றுக் காெண்டார்கள். நீண்ட காலத்தின் பின்னர் 2016ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் ஒருவர் சித்தியடைந்துள்ளார்.
2016ல் கல்லூரி
இவ்வாண்டில் இக் கல்லூரி அதிபர், பகுதி நேர ஆசிரியர், தாெண்டர் ஆசிரியர் உட்பட 23 ஆசிரியர்களுடனும் கல்விசாரா ஊழியர் ஒருவருடனும் 324 மாணவர்களுடனும் இயங்கி வருகின்றது.
நடைமுறையிலுள்ள செயற்றிட்டங்கள்
- ஆரம்ப மாணவர் செயற்றிட்டம்.
- ஆரம்ப ஆசிரியர் செயற்றிட்டம்.
- இடை நிலை மாணவர் செயற்றிட்டம்.
- இடை நிலை ஆசிரியர் செயற்றிட்டம்.
- தரம் 1-5 மாணவர்களுக்கான மாெழி செயற்றிட்டம்.
அதிபர்கள்
- காராளசிங்கம்
- ராமலிங்கம்
- முத்துக்குமாரசுவாமி
- சிவகுருநாதன்
- சண்முகராஜா
- பாென்னம்பலம்
- ஆறுமுகராஜா
- தாஸ்
- குமாரவேலு
- என். எஸ். செல்வராஜா (01-01-1989 - 29-07-1997)
- எம். மகாதேவா (30-07-1997 - 20-11-2001)
- வி. மாேகனநாதன் (28-11-2001 - 02-01-2010)
- ஏ. பேரின்பநாயகம் (01-02-2010 - 03-04-2014)
- பி. பாலகுமார் (01-09-2014 - இன்றுவரை)
மன்றங்கள் - மாணவர் மன்றங்கள்
- தமிழ் மன்றம்
- கணித விஞ்ஞான மன்றம்
- அழகியல் மன்றம்
- ஆங்கில மன்றம்
- சுகாதார மன்றம்
- பழைய மாணவர் மன்றம்
கழகங்கள்
- சாரணர் சாரணியர்
பாடசாலைப் பண்
இராகம்: மோகனம்
தாளம்: ஆதி.
இயற்றியவர்: கி. நெல்லைநாதர் (ஆசிரியர்)
இசையமைப்பு: திருமதி சி. விஜயரட்ணம் (ஆசிரியர்)
- வாழிய அராலி இந்துக் கல்லூரி
- வாழியவாழிய வாழியவே
- வையகம் எங்கும் புகழ்ந்திடஎங்கும்
- வளர் கல்லூரி வாழியவே
- ஈழமணித் திருநாட்டினில் எங்கும்
- இலங்கிடும் கலைகள் ஓங்கும்
- சூழிசைக் கழகம் இதுவேஎன்றும்
- துலங்கிடும் கலையகம் இதுவே
- செந்தமிழ் ஆங்கிலம் சேர்ந்து விளங்கும்
- திருநிறைக் கழகமும் இதுவே
- எந்தையர் அன்புடன் இனிதுறகாத்து
- ஏத்து கல்லூரி இதுவே
- அழகுக் கலையும் மணியார் நெசவும்
- அருவிஞ்ஞானக் கலையும்
- உழவுக் கலையும் ஓங்க நல்கும்
- உயர் கல்லூரி வாழியவே
- திங்கள் பாேலதிகழ்ந்திடக் கல்வி
- செல்வமளித்திடும் தாயே
- எங்குசென்றாலும் எத்துயர் வரினும்
- என்றும் நின்நலம் மறவாேம்
- இனிய நற்கலைகள் நல்குமராலி
- இந்துக் கல்லூரி வாழ்க
- இன்பமே சூழ்ந்திட வாழ்கவாழ்க
- எல்லாேரும் வாழ்ந்திட வாழ்க வாழ்க.....
மேற்கோள்கள்
- ↑ NTB upgrades Jaffna school library, Daily News, 23 சூன் 2010
- ↑ 2.0 2.1 யா/ அராலி இந்துக் கல்லூரி: பரிசுதினம் அதிபர் அறிக்கை 2015