அரானிகோ
அனிகோ (Aniko), அனிகே (Anige) அல்லது அரானிகோ (Araniko; 1245 - 1306); நேபாளம் மற்றும் சீனாவின் யுவான் வம்சத்தின் கலைகளிலும் அப்பகுதியில் கலைப்பரிமாற்றங்களிலும் ஒரு முக்கிய நபராகக் கருதப்படுகிறார். இவர் நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் அபயா மல்லா என்பவரின் ஆட்சிக் காலத்தில் பிறந்தார். பெய்ஜிங்கில் உள்ள மியாவோயிங் கோவிலில் வெள்ளை தூபியைக் கட்டியதற்காக அறியப்படுகிறார். ஜெயா பீம் தேவ் மல்லாவின் ஆட்சியின் போது, திபெத்தில் ஒரு தங்க தூபியைக் கட்டும் திட்டத்தில் இவர் நேபாளத்திலிருந்து திபெத்திற்கு அனுப்பப்பட்டார். அனிகோ அங்கு தனது துறவறத்தைத் தொடங்கினார். பின்னர் திபெத்திலிருந்து யுவான் வம்சத்தின் நிறுவனர் (1279-1368) பேரரசர் குப்லாய் கானின் நீதிமன்றத்தில் பணியாற்றுவதற்காக வட சீனாவிற்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் சீன-திபெத்திய கலைப் பாரம்பரியத்தை சீனாவிற்குக் கொண்டு சென்றார். தனது பிற்கால வாழ்க்கையில், அவர் துறவறத்தைக் கைவிட்டு, சீனாவில் தனது குடும்பத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழத் தொடங்கினார். அவர் மொத்தம் ஆறு மகன்களையும் எட்டு மகள்களையும் பெற்ற ஏழு பெண்களை மணந்தார்.
மொழிபெயர்ப்பில் சில குழப்பங்கள் காரணமாக, இவரது பெயர் பழைய நூல்களில் அர்னிகோ அல்லது அரானிகோ என எழுதப்பட்டுள்ளது. பாபுரம் ஆச்சார்யா செய்த ஒரு தவறு காரணமாக இவரது சமற்கிருதப் பெயரை பாலபாகு என்று கூறியது. இருப்பினும், பின்னர் அவர் அனிகோ என்பது சமற்கிருதப் பெயரான அனேகா என்பதற்கான சீன உச்சரிப்பாக இருக்கலாம் என்று வாதிடுகிறார்.[1] அவரது பெயர் ஆ நி கா, அதாவது "நேபாளத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய சகோதரர்" என்று பொருள்படும். இது நம்பத்தகுந்த விடயமாக இருக்கலாம்.
இளமை
அனிகோ நேபாளத்திலுள்ள காத்மாண்டு பள்ளத்தாக்குப் பகுதியில் 1245 இல் பிறந்தார். அப்பொழுது காத்மாண்டு பள்ளத்தாக்கு அரசர் அபய மல்லா (1216-55) என்பவரால் ஆளப்பட்டு வந்ததது ஆனால் அப்போதைய நேபாள வரலாறுகளில் அனிகோ பற்றிய எந்த குறிப்பும் காணப்படவில்லை. ஆயினும் இவரைப் பற்றிய குறிப்புகள் மற்றும் இவரைப்பற்றிய அனைத்து விவரங்களும், சீன வரலாற்றுக் குறிப்பேடுகளில் காணப்படுகின்றன. சீன வரலாறு மற்றும் வரலாற்றாசிரியர் பாபுராம் ஆச்சார்யா, சிற்பங்கள் மற்றும் நுண்கலைகளுக்கு புகழ்பெற்ற இடமான லலித்பூர் என்றழைக்கப்படும் படானில் இருந்து அர்னிகோ வந்திருக்கக்கூடும் என்று கருதுகிறார். அதே போல அவர் ஒரு பௌத்தராக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பதும் ஆனால் அவரது சாதி நெவர் சாதி என்பதும் ஓர் ஊகத்தின் அடிப்படையிலான கருத்தாகும் இருப்பினும், அபயா மல்லாவின் வாரிசான ஜெயா பீம் தேவ் மல்லாவின் காலத்தில் அர்னிகோ காத்மாண்டு பள்ளத்தாக்கில் வாழ்ந்தார் என்பது அறியப்படுகிறது.[1][2]
சீன பதிவுகளில், அவரது தாத்தாவின் பெயர் "மி-டி-ரா" என்றும், பாட்டி "குன்-டி-லா-குய்-மீ" என்றும், சமஸ்கிருதப் பெயர்களுக்கான சீன உச்சரிப்பு முறையே மித்ரா மற்றும் குண்டலட்சுமி என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது தந்தையின் பெயர் "லா-கே-நா" (லக்ஷ்மன்), அவரது தாயின் பெயர் "ஷு-மா-கே-தை".[1]
தொழில்முறை கலைஞர்களைப் பற்றிய கதைகளில் அடிக்கடி கூறப்படுவது போல, அனிகோ தனது சிறுவயதிலும்கூட ஒரு கலை வல்லுநராக இருந்தார் என கல்லறைக் கல்வெட்டுக் குறிப்பு ஒன்று குறிப்பிடுகிறது. அவர் மூன்று வயதாக இருந்தபோது, அவரது பெற்றோர் புத்தருக்கு மரியாதை செலுத்துவதற்காக குழந்தையை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த தாது கோபுரத்தைக் கண்ட அர்னிகோ இந்த மரத்துண்கள், பூமீஸ், ஆன்டா ஆகியவற்றைக் கட்டியது யார்? என மிகுந்த ஆச்சரியத்துடன் வினவினார். மிகுந்த ஆச்சரியத்துடன் அவர் பிறவிக் கலைஞர் என்பதை சுற்றியுள்ள மக்கள் உணர்ந்தனர். அவர் ஏழு வயதில் இருந்தபோது, அவரது மனோபாவம் ஒரு பெரியவரைப் போல நிதானமாக இருந்தது. பள்ளியில், அவர் தனது பாடப்புத்தகங்களில் தேர்ச்சி பெற்றார், இவ்வளவு குறுகிய காலத்தில் மற்றவர்கள் அவர்களது தாழ்வுணர்ச்சியை ஒப்புக்கொள்ளும் வகையில் ஒரு நல்ல அழகெழுத்தியல் கலைஞராகவும் ஆனார். கலை பற்றிய கட்டுரைகளை வாசித்ததைக் கேட்டவுடன் அவர் மனப்பாடம் செய்யலானார். நேபாளத்திலிருந்து திபெத்துக்குச் செல்வதற்கு முன்பே அவர் ஏற்கனவே ஓவியம், முப்பரிமாண உருவஙக்ள்,வார்ப்புருப் படங்கள் ஆகியவற்றை உருவாக்கும் நிபுணராக இருந்தார்.[3]
மேற்கோள்
- ↑ 1.0 1.1 1.2 Acharya, Baburam (1960). Aniko: His Family and Place of Birth. Regmi Research Series, vol 3, issue 11, pp. 241–243. Retrieved 31 Dec, 2012.
- ↑ Petech, Luciano (1984). Mediaeval History of Nepal (ca. 750–1480). 2nd ed. Serie orientale, toma 54. Rome: Institutio Italiano per il Medio ed Estremo Oriente. p.100
- ↑ Cheng Jufu (1316). Liangguo Minhui gong shendao bei (The Spirit-way Stele for Minhui, the Duke of State of Liang), in Cheng Xuelou wenji (The Collective Works of Cheng Jufu).
வெளி இணைப்புகள்
- Sacred Visions: Early Paintings from Central Tibet, an exhibition catalog from The Metropolitan Museum of Art (fully available online as PDF), which contains material on Araniko