அம்புஜத்தம்மாள்
அம்புஜத்தம்மாள் | |
---|---|
பிறப்பு | மெட்ராஸ் | 8 சனவரி 1899
இறப்பு | 6, அக்டோபர், 1983 (84 அகவை) |
பெற்றோர் | எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் ரங்கநாயகி |
வாழ்க்கைத் துணை | தேசிகாச்சாரி |
விருதுகள் | தாமரைத்திரு (1964) |
அம்புஜத்தம்மாள் (Ambujathammal, சனவரி 9, 1899[1]-1983) என்பவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாட்டுப் பெண் ஆவார். இவரது தந்தை எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் மற்றும் தாய்வழி பாட்டனார் வி. பாஷ்யம் ஐய்யங்கார் ஆகியோர் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் ஆவார்.
இளமைப்பருவம்
அம்புஜத்தம்மாள் 1899 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் எட்டாம் நாள் வசதியான குடும்பத்தில் பிறந்தார். வீட்டிலேயே கல்வி பயின்றார். தமிழ், ஆங்கிலம் ,இந்தி, சமஸ்கிருதம் எனப் பல மொழிகளையும் கற்றார்.
வாழ்க்கை
அன்னை கஸ்தூரிபாயின் எளிமையான வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு இவரும் எளிமையாக வாழ்ந்தார். பிற்போக்கு சிந்தனைகளுடைய குடும்பச் சூழலிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டார். வை. மு. கோதைநாயகி, ருக்குமணி லட்சுமிபதி ஆகியோருடன் இணைந்து பெண்ணடிமைக்கு எதிராகப் போராடினார். பாரதியாரின் பாடல்களைப் பாடி மக்களிடையே விடுதலையுணர்வைத் தூண்டினார் ஆங்கிலேய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அந்நியத் துணிகள் விற்கும் கடைக்கு முன்பாக மறியல் போராட்டம் நிகழ்த்தியதனால் வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில், தான் கற்ற மொழிகளைப் பிறருக்குக் கற்றுக் கொடுத்தார். காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்ற செல்லப் பெயர் பெற்றார். தனது தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் ”சீனிவாச காந்தி நிலையம்” என்னும் தொண்டு நிறுவனத்தை அமைத்தார். 1964 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது[2].1955 ஆம் ஆண்டு, சென்னை, ஆவடியில் நடைபெற்ற சிறப்புமிக்க காங்கிரஸ் மாநாட்டின் செயலாளராக இருந்து அம்புஜம் அம்மையார் அரும்பாடுபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
வகித்தப் பதவிகள்
- மாநிலத் துணை தலைவர் - தமிழ்நாடு காங்கிரஸ் குழு [1957 - 1962]
- மாநில சமூக நல வாரியம் (சேர்மன்) [1957 - 1964]
நூல்
நான் கண்ட பாரதம் என்ற நூலை எழுதியுள்ளார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 தமிழ்நாடு அரசுப் பாடநூல், எட்டாம் வகுப்பு, இரண்டாம் பருவம், தமிழ். உரைநடை: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம். 2015. pp. 6, 7.
- ↑ "இந்திய அரசு வலைத்தளம் - 1954 முதல் 2013 வரை பத்மசிறீ விருது பெற்றவர்கள் பற்றிய விவரம்" (PDF). Archived from the original (PDF) on 2014-11-15. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.
{{cite web}}
: Unknown parameter|https://www.webcitation.org/6U68ulwpb?url=
ignored (help)