அமுதா (2018 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அமுதா
இயக்கம்பி. எஸ். அர்ஜூன்
தயாரிப்புசபிக் ஏகேஸ்
திரைக்கதைபி. எஸ். அர்ஜூன்
இசைஅருண் கோபன்
நடிப்பு
  • ஸ்ரீயா ஸ்ரீ
  • அனிஸ் சாஸ்
  • லவின் சைமன் ஜோசப்
  • அஸ்னா சுதீர்
  • அஸ்ஸிஸி ஜிப்சன்
ஒளிப்பதிவுராஜேஷ் பனன்கட்
படத்தொகுப்புஜிதின் ஜோன்
கலையகம்சதர்ன் பிலிம் பக்டரி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அமுதா (Amutha) 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் உளவியல் சார்ந்த திரைப்படமாகும். பி. எஸ். அர்ஜூன் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.[1] இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் ஸ்ரீயா ஸ்ரீ, அனீஸ் சாஸ் மற்றும் லெவின் சைமன் ஜோசப் ஆகியோரும் அவர்களுடன் இணைந்து அஸ்னா சுதீர், சிவகுமார் ராஜூ, பேபி லியோனர், அஸ்ஸிஸி ஜிப்சன் ஆகியோரும் நடித்திருந்தனர்.[2] இத்திரைப்படத்தை சதர்ன் பிலிம்பேக்டரி சார்பாக சபிக் தயாரித்திருந்தார். அருண் கோபன் இத்திரைப்படத்திற்கான இசையை அமைத்திருந்தார். மேலும் ராஜேஷ் பனங்கட் இத்திரைப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொண்டிருந்தார். ஜனவரி 2018 ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது.[3][4]

நடிகர்கள்

  • ஸ்ரீயா ஸ்ரீ - அமுதா
  • அனிஸ் சாஸ் - இன்ஸ்பெக்டர் நரேந்திரன்
  • லெவின் சைமன் ஜோசப் - கௌதம் ஸ்ரீனிவாசன்
  • அஸ்னா சுதீர் - மாயா ஸ்ரீனிவாசன்
  • சிவகுமார் ராஜூ - மைக்கல் ராஜ்
  • அஸ்ஸிஸி ஜிப்சன் - மனோகர்
  • லயேனர் - பேபி அமுதா
  • கெய்ஸ் - கில்லர்
  • நிம்மி அருண் கோபன் - லக்ஷ்மி
  • ஜோஷ் - கிரிபாகரன்
  • சிந்து - சியாமா
  • சபிக் - குமார்
  • முருகன் - ஹீரோ
  • விக்னேஷ் தனுஷ்

தயாரிப்பு

2016 ல் பி. எஸ். அர்ஜூன் 'அமுதா' திரைப்பத்திற்கான கதையை எழுத தொடங்கியிருந்தார். இவர் முதலில் கதையின் தொடக்கத்தையும் கதையின் உச்சகட்டத்தையும் எழுதினார். அதன் பின்னர் பல்வேறு கதையின் வரிகளை அதனுடன் இணைத்தார். ஆரம்பத்தில் தமிழுக்கே அமுதா திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் லீனாவை முன்னணி கதாப்பாத்திரமாக கொண்டு மலையாளத்திலும் உருவாக்க கலந்துரையாடப்பட்டது. எவ்வாறு இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் கதையில் அதிகளவு வன்முறைச்சம்பவங்கள் இருப்பதை விரும்பவில்லை. ஆகையால் இம்முடிவு கதையை தமிழில் உருவாவதற்கு வித்திட்டது.[4]

பி. எஸ். அர்ஜூன் ஆங்கில குறும்படமான சுக்சுவாங்கினை 25000 ரூபாய் மதீப்பிட்டில் எடுத்திருந்தார். அக்குறும்படத்தில் ஒரு பகுதியில் ஸ்ரீயா ஸ்ரீ நடித்திருந்தார். இதனால் ஸ்ரீயா ஸ்ரீ சபிக் ஏகேஎஸ்ஸிடம் பி. எஸ். அர்ஜூனின் பெயரை பரிந்துரை செய்தார். இக் குறும்படத்தினால் கவரப்பட்ட அவர் அமுதா திரைப்படத்தை தயாரிப்பதற்கு முன்வந்தார்.[5].

இசை

அருண் கோபன் இத்திரைப்படத்திற்கான இசையை அமைத்திருந்தார். ஜீ. ரா இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களிற்கான பாடல்வரிகளை எழுதியுள்ளார்.[6] இத்திரைப்படத்தில் உள்ள " கொஞ்சம் சிரிக்கிறேன்" என்பது மாத்திரம் ஜஸ்வர்யா ராஜேஷினால் செப்டம்பர் 3, 2018 ல் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நான்கு பாடல்கள் அமைந்துள்ளன. அவை செப்டம்பர்20, 2018 ல் வெளியிடப்பட்டுள்ளது.இத்திரைப்படத்தின் பாடல் தொகுப்புக்கள் ரசிகர்களிடம் பெரும் நேரான பின்னூட்டல்களை பெற்றுள்ளது. சித்தார்த் ஸ்ரீனிவாஸின் ஒன்லி கொலிவூட் இத்திரைப்படத்தின் பாடல் தொகுப்புகளிற்கு ஐந்தில் மூன்று நட்சத்திரங்களை வழங்கியிருந்தது.[7]

மேற்கோள்கள்

  1. "Title inspired by character in Mani Ratnam movie" (in en). Deccan Chronicle. 2018-04-04. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/040418/title-inspired-by-character-in-mani-ratnam-movie.html. 
  2. "‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தால் உருவான ‘அமுதா’..!" (in en-US). Tamil Cine Talk. 2018-03-26. http://www.tamilcinetalk.com/amutha-movie-preview/. 
  3. "Amutha (2018) Tamil Movie" (in en-GB). Plumeria Movies. 2018-01-05 இம் மூலத்தில் இருந்து 2018-04-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180411174725/http://www.plumeriamovies.com/psarjun-amutha-2018-tamil-movie/. 
  4. 4.0 4.1 "மணிரத்னத்தின் "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தால் உருவான அமுதா!". NewsFast (in English). பார்க்கப்பட்ட நாள் 2018-04-09.
  5. "All about the chills" (in en). Deccan Chronicle. 2018-08-31. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/310818/all-about-the-chills.html. 
  6. "Marching to his own tune" (in en). Deccan Chronicle. 2018-07-22. https://www.deccanchronicle.com/entertainment/music/220718/marching-to-his-own-tune.html. 
  7. "Amutha Songs Review - Only Kollywood" (in en-US). Only Kollywood. 2018-09-23. https://www.onlykollywood.com/amutha-songs-review/. 
"https://tamilar.wiki/index.php?title=அமுதா_(2018_திரைப்படம்)&oldid=30122" இருந்து மீள்விக்கப்பட்டது