அமிர்தன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கவிதைக்கு அமிர்தன்(AMIRTHAN)/ நாவலுக்கு யுகபிரம்மன் (YUGA BRAMMAN) (இயற்பெயர்: கா. சுப்ரமணியன், 8 சூன் 1982) என்பவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் கூட . மேலும் சரித்திர நாவலாசிரியர், ஆன்மீகவாதி , கதையாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்டவர்.

பிறப்பும் கல்வியும்

இவர் 1982 ஆம் ஆண்டு சூன் மாதம் 8 ஆம் நாள் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கரிப்பூர் என்ற கிராமத்தில் காந்தி, வள்ளியம்மாள் இணையருக்கு மகானக பிறந்தார். இவர் தன் பள்ளிப்படிப்பை 1986 முதல் 1991 வரை கீழ்கரிப்பூர் அரசு நடுநிலை பள்ளியிலும், 1992 முதல் 1998 வரை வேட்டவலம் அரசு ஆண்கள் பள்ளியிலும் கற்றார். 1999 முதல் 2004 வரை சென்னை அரசு அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டமும் 2005 முதல் 2007 வரை முதுகலை சட்டப் படிப்பும் கற்றார். மேலும் பெங்களூரு நேசனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா யுனிவேர்சிட்டி, தில்லி பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலை கழகம் , தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் பல்கலைகழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் எம்.எ, எம்.பி.எ மற்றும் பட்டய படிப்புகளை முடித்து பல்வேறு பட்டம் பெற்றுள்ளார். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

நாவலாசிரியராக /பாடலாசிரியராக

யுகபிரம்மன்(YUGA BRAMMAN) என்ற புனைப்பெயரில் சரித்திர நாவல்கள் எழுதிக் கொண்டிருக்கிறார். இவரது சிம்ம கர்ஜனை என்ற பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு குறித்த சரித்திர நாவல் வானதி பதிப்பகத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதே போல் கரிகால சோழன் குறித்த சோழசிங்காதனம் என்ற ஐந்து பாகங்கள் கொண்ட சரித்திர நாவலின் முதல் பாகம் தற்போது வெளியிடப் பட உள்ளது. அத்தோடு , மாறவர்மன் விக்கிரம பாண்டியன் குறித்த "இராச நாயன்",(மூன்று பாகம்) பொற்கைப் பாண்டியன் குறித்த " கொற்கை மச்சாரம்", இளஞ்சேரல் இரும்பொறை குறித்த "வேழமங்கை", இராசராச சோழன் குறித்த "மெயக்கீர்த்தன்"(இரண்டு பாகம்), ராஜேந்திர சோழன் குறித்த "ராஜதானி"(இரண்டு பாகம்), பெருஞ்சேரல் இரும்பொறை குறித்த "வயமான் கோட்டம் " முதலிய சரித்திர நாவல்களும் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

அதேபோல புதினங்கள் வரிசையில் "கனவடுக்கு", வான் மனிதர்கள், ராசாக்கிளி, மேல்முண்டு, செரின் , கிருமிகள் உலகம், மெட்ராஸ் சந்தை முதலிய நூல்கள் தற்போது 2022 பதிப்பில் இருந்து கொண்டிருக்கிறது.

கவிஞர் அமிர்தன் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார்.இயக்குனர் மாதேஸ்வராவின் ‘சாதனை பயணம் ‘ என்ற படத்தில் முதலில் ‘வானம் வசப்படும்’ என்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். 2019 ஆண்டுவரை சுமார் 13 திரைப்பட பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் ‘மலையே மகேசா’ மற்றும் ‘பஞ்சபூதன்’ என்ற பக்தி ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளார். இதுவரை 50 க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை எழுதியுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு ‘ கனவுகள் விற்பவன் என்ற கவிதை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் தொடர்ந்து இசையமைப்பாளர் பரத்வாஜ் , இசையரசர் தஷி , இசையமைப்பாளர் காந்திதாசன், இசையமைப்பாளர் ராம்ஜி ஆகியோரது இசையில் தமிழ்த் திரைப்படங்கள், ஆல்பம் என தொடர்ந்து பாடல்களை எழுதி வருகிறார். தொடர்ந்து 2௦21 இல் "கூன் காலம்", "வலியின் குறுநகை", "வச்சூத்தி","எனக்கென்று உன் இதயம்", சிலப்பதிகார கொலை வழக்கு முதலிய நூல்களை வெளியிட்டு இருக்கிறார்.

விருதுகள்

2019 ஆம் ஆண்டுக்கான ‘கவிமாமணி’ விருதை சிறந்த பக்தி பாடலாசிரியருக்கான தனது ‘அன்னையே அங்காளி’ என்ற ஆல்பத்துக்காக குலோபல் பீஸ் யூனிவர்சிட்டி இவருக்கு வழங்கியுள்ளது.

2021 ஆண்டு வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் (Fetna) நடத்திய மாபெரும் கவிதைப்போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கிறார்.

மேற்கோள்கள்

https://www.youtube.com/watch?v=vTu0B1aqnkY&t=1388s

"https://tamilar.wiki/index.php?title=அமிர்தன்&oldid=15781" இருந்து மீள்விக்கப்பட்டது