அமித் பூரி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அமித் பூரி
படிமம்:Amit Puri.jpg
பிறப்பு28 சனவரி 1979 (1979-01-28) (அகவை 47)
மும்பை
கல்விசென்னை விஜிபி அளித்த உணவக மேலாண்மை பட்டயம், அமெரிக்க விடுதிகள் மற்றும் தானியர் விடுதிகள் சங்கம் அளித்த பட்டயம்.
பணிசமையற்கலை நிபுணர், எழுத்தாளர் & தொழில்முனைவோர்
சமையல்சார் பணி
சமையல் முறைContemporary Comfort
வலைத்தளம்
http://chefamitpuri.com/

அமித் பூரி (Amit Puri) (பிறப்பு: சனவரி 28,1979) என்பவர் இந்திய சமையற்கலை வல்லுநரும் தொழில்முனைவோரும் சமையற்கலை புத்தக எழுத்தாளரும் ஆவார்.[1][2][3]

இளமை

மும்பையில் பிறந்து வளர்ந்த அமித், தனது குழந்தைப் பருவத்திலிருந்தே சமையற்கலையில் ஆர்வம் கொண்டிருந்தார்.[4] இவர் அமெரிக்க விடுதிகள் மற்றும் தானியர் விடுதிகள் சங்கத்தில் சமையற்கலையில் பட்டம் பெற்றுள்ளார். சென்னையில் உள்ள விஜிபி உணவக மேலாண்மைக் கழகத்தில் பட்டயப்படிப்பினை முடித்துள்ளார்.[4]

பணி

அமித்பூரி மும்பையில் உள்ள தாஜ் உணவகத்தில் பயிற்சி பெற்ற பிறகு, மும்பையில் உள்ள தி ஆர்க்கிட்டில் தனது தொழிற்சார்ந்த பணியினை துவக்கினார்.[4] இவர் தி காபி பீன் & டீ லீப், எல். எம். என். ஓ. க்யூ,[5] ரிபைனரி 091,[6] துபாய், ஆப்டர்லைப் காசுட்ரோபப் போன்ற தேசிய மற்றும் பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.[7] 2022ஆம் ஆண்டு, அமித் இந்தியாவின் சமையல் மரபால் உந்துதல் பெற்று, "தி ப்ளூ டிபின்" என்ற திரள் சமையலறையை மும்பையில் தொடங்கினார்.[8][9]

அமித் பூரி ரீடிபைனிங் கம்பர்ட் பூட் வித் செப் அமித் பூரி எனும் சமையல் குறித்த புத்தகத்தினை எழுதியுள்ளார்.[3] பெமினா, அப்பர் கிரசுட் இந்தியா மற்றும் ஆர்கிடெக்சரல் டைஜஸ்ட் போன்ற முன்னணி இதழ்களில் அமித்பூரி குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.[10]

பனுவல்

  • Redefining Comfort food with Chef Amit Puri, ASIN:9389058333 (ஆங்கிலத்தில்)

மேற்கோள்கள்

  1. "Eat: Amit Puri, corporate chef, Pan India Food Solutions Gajalee". https://www.hindustantimes.com/india/picking-order/story-8r6VUtMT8UaqnDNjDvgyaI.html. 
  2. "Indian chef Amit Puri redefines comfort food with the launch of his first cookbook". Indulgexpress.com (in ஆங்கிலம்). Indian Express Limited.
  3. 3.0 3.1 "Redefining comfort food". https://recipes.timesofindia.com/articles/features/redefining-comfort-food/articleshow/78480360.cms. 
  4. 4.0 4.1 4.2 Grace Daniell, Oshin. "New meets old". https://www.theweek.in/content/week/smart-life/2020/07/08/new-meets-old.html. 
  5. Ghosal, Sharmistha. "Kolkata's newest lounge bar LMNO_Q has a breathtaking view of the city's skyline". https://www.indulgexpress.com/food/food-calcutta/calcutta-multi-cuisine/2021/dec/08/kolkatyas-newest-lounge-bar-lmno_q-has-a-breathatking-view-of-the-ciutys-skyline-37621.html. 
  6. Khatoon, Farah. "Refinery 091 at sector V is the hotspot to unwind and chill". https://www.indulgexpress.com/foods/kolkata-foods/asian-kolkata/2019/mar/01/refinery-091-at-sector-v-is-the-hotspot-to-unwind-and-chill-13078.html. 
  7. AlSadr, AHmed. "Afterlife, a gastropub offering a unique combination of Indian and Turkish delicacies launches in Souk Al Bahar". https://www.dubaiglobalnews.com/2019/05/21/109767/. 
  8. Singh, Sakshi. "Close to 75 percent are repeat customers". https://hospitality.economictimes.indiatimes.com/news/restaurants/close-to-75-percent-are-repeat-customers-amit-puri/82731958. 
  9. Maskeri, Anju. "Dham laga ke". https://www.mid-day.com/sunday-mid-day/article/dham-laga-ke-23181255. 
  10. "Try these interesting vegetarian Chinese dishes at home". https://www.femina.in/food/make-vegetable-kim-yam-pok-choy-and-tofu-and-stirfried-baby-corn-mushroom-and-water-chestnut-at-home-7174.html. 
"https://tamilar.wiki/w/index.php?title=அமித்_பூரி&oldid=249339" இலிருந்து மீள்விக்கப்பட்டது