அமலதாசன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அமலதாசன்
அமலதாசன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
அமலதாசன்
பிறந்ததிகதி செப்டம்பர் 1]], 1939
அறியப்படுவது எழுத்தாளர்

கவிஞரேறு அமலதாசன் (பிறப்பு: செப்டம்பர் 1, 1939) சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர். மலேசியா கோலசிலாங்கூரில் பிறந்த இவர் தோட்டப் பள்ளியிலும் ரவாங், கிளைவ் இன்ஸ்டிடியுசன் ஆங்கிலப் பள்ளியிலும் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்பு நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிரம்பான் நகரில் இயங்கிவந்த ‘நெகிரி செம்பிலான் டீச்சர்ஸ் யூனியன் - ரீஜண்ட் இன்ஸ்டிடியூசன் பள்ளியில் உயர்நிலைக் கல்வியைத் தொடர்ந்தார்.

தொழில்

  • தமிழ்ப்பள்ளி ஆசிரியர்.

பதவிகள்

இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும், அவ்லட் வட்டார தமிழர் திருநாள் விழாக் குழு உறுப்பினராகவும், செயலாளராகவும், அவ்லக் தமிழ்பள்ளி வள்ளுவர் நூலகத்தின் செயலாளராகவும், மாதவி இலக்கிய மன்றத்தின் செயற்குழு உறுப்பினராகவும், பொருளாளராகவும், பொதுச்செயலாளராகவும், துணைத் தலைவராகவும், தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும், செயற்குழு உறுப்பினராகவும், துணைத்தலைவராகவும், எழுத்தாளர் கழகத்தின் தலைவராகவும், சிங்கப்பூர்க் குடியரசின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியர் பண்பாட்டு மாதத்தின் ‘தமிழ் மொழி வார' இணைத் தலைவராகவும், தேசிய புத்தக மேம்பாட்டு மன்றத்தின் பேராளராகவும், 1வது தமிழ்மொழி வாரத்தில் கழகத்தின் பேராளராகவும், 2வது தமிழ்மொழி வாரத்தின் ஆலோசகராகவும், தமிழர் பேரவையின் உதவித் தலைவர் மற்றும் கலாசாரக் குழுத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இலக்கியப் பணி

1958 ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கிய இவருக்கு தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலர் களமமமைத்துக் கொடுத்தது. கவிதைத் துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தேசியம், மொழி, சமுதாயம், இயற்கை, காதல், தத்துவம், இசைப்பாடல்கள்,[1] சிறுவர் பாடல்கள் என பல்துறைகளிலும் சுமார் 1500க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய படைப்புகள் சிங்கப்பூர், மலேசியா, தமிழ்நாடு போன்ற நாடுகளிலிருந்து வெளிவரும் பத்திகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மேலும் சிங்கப்பூர் வானொலி, தொலைக்காட்சியிலும் ஒலி, ஒளிபரப்பாகியுமுள்ளன.

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்

  • அலைபாடும் கடலும் எனும் இவரது பாடலுக்கு சிறப்புப் பரிசு
  • கவிஞரேறு அமலதாசன் விருது
  • மலேசியாப் பாரதிதாசன் இயக்கத்தின் பொற்கிழியும் கேடயமும்

மேற்கோள்கள்

  1. "புல்லாங்குழல் : இசை பாடல்கள் =Pullanguzhal, The flute : an anthology /அமலதாசன். Pullāṅkul̲al : icai pāṭalkaḷ =Pullanguzhal, The flute : an anthology /Amalatācan̲. – National Library". www.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2023-01-22.

உசாத்துணை

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://tamilar.wiki/index.php?title=அமலதாசன்&oldid=5983" இருந்து மீள்விக்கப்பட்டது