அமரண்டைட்டு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அமரண்டைட்டு
Amarantite
படிமம்:Amarantite - Javir-e-Sagand, Yazd Province, Iran.jpg
பொதுவானாவை
வகைசல்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுFe3+2O(SO4)2·7H2O
இனங்காணல்
நிறம்சிவப்பு முதல் பழுப்புச்சிவப்பு, ஆரஞ்சு சிவப்பு
படிக இயல்புஊசிகளாக கதிர்வீச்சு அல்லது படர்ந்த திரட்டுகளாக; நெடுவரிசை அல்லது கத்தி வடிவமாக இருக்கும்.
படிக அமைப்புமுச்சாய்வு
பிளப்பு{010} மற்றும் {100} இல் சரிபிளவு
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2 12
மிளிர்வுபளபளக்கும்
கீற்றுவண்ணம்எலுமிச்சை மஞ்சள்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி2.189–2.286
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (−)
ஒளிவிலகல் எண்nα = 1.516 nβ = 1.598 nγ = 1.621
இரட்டை ஒளிவிலகல்δ = 0.105
பலதிசை வண்ணப்படிகமைX = நிறமற்றது; Y = வெளிர் மஞ்சள்; Z = செம் பழுப்பு
2V கோணம்அளக்கப்பட்டது: 30°
மேற்கோள்கள்[1][2][3]

அமரண்டைட்டு (Amarantite) என்பது Fe3+2O(SO4)2•7H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். Fe3+SO4(OH)•3H2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டாலும் இக்கனிமம் அடையாளப்படுத்தப்படுகிறது.

அமரண்டைட்டு என்ற பெயர் அமராந்து என்ற கிரேக்க சொல்லிலிருந்து வந்தது. அமராந்து என்ற சொல்லின் பொருள் கற்பனையான ஒரு சிவப்பு பூவைக் குறிக்கும். கனிமம் அத்தகைய சிவப்பு நிறத்தைக் கொண்டிருப்பதால் அமரண்டைட்டு எனப் பெயரிடப்பட்டது.[3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் அமரண்டைட்டு கனிமத்தை Ama[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

அமரண்டைட்டு முச்சரிவச்சு படிக அமைப்பில் காணப்படுகிறது. அதாவது படிகவியல் ரீதியாக, இது ஒரே ஒரு சமச்சீர் மடிப்பை மட்டுமே கொண்டுள்ளது. சரியாக ஒரே மாதிரியாக இருக்க 360 பாகை சுழற்றப்பட வேண்டும். முச்சரிவச்சு படிகம் என்பதால் அமரண்டைட்டு ஈரச்சு ஒளியியல் வகுப்பில் அடங்கும். அச்சுப் 90 பாகைக்குச் சமமாக இருக்காது. ஒவ்வொரு அச்சின் பக்கமும் ஒரே நீளத்திலும் இருக்காது.[5] அமரண்டைட்டு திசைமாறுபாட்டுப் பண்பு கொண்டதாகும்.[2] அதாவது, ஒளியின் வேகம் படிகவியல் திசையைப் பொறுத்து மாறுபடும். மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஒளிவிலகல் குறியீடுகளும் கொண்டிருக்கும்.[6]

அமரண்டைட்டு மிகவும் அரிதான ஒரு கனிமமாகும். சிலி நாட்டின் வெள்ளிச் சுரங்க மாவட்டமான கரோகோல்சு போன்ற ஓரிரு இடங்களில் மட்டுமே இதைக் காணலாம். இரும்பின் மூலமாக இருந்தாலும், இரும்புக்காக வெட்டியெடுக்க போதுமான அமரண்டைட்டு கனிமம் கிடைப்பதில்லை. இருப்பினும், படிக வடிவத்தில் காணப்படும்போது இதன் சிவப்பு ஆரஞ்சு நிறம் சேகரிப்பாளர் பொருளாக மதிப்பை அளிக்கிறது.[5]

மேற்கோள்கள்

  1. Amarantite in the Handbook of Mineralogy
  2. 2.0 2.1 Amarantite on Mindat.org
  3. 3.0 3.1 Amarantite data on Webmineral
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  5. 5.0 5.1 Alpers, C.N., Jember, J.L. and, Nordstrom, D.K.(2000) Reviews in Mineralogy and Geochemistry (volume 40) Sulfate Minerals: Crystallography, Geochemisrty, and Environmental Significance
  6. Klein, C. and C. S. Hurlbut, Jr. (1985) Manual of Mineralogy, Wiley, 20th ed., p. 236 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-80580-7
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
  • Palache, C., Berman, H., & Frondel, C. (1951), The System of Mineralogy of James Dwight Dana and Edward Salisbury Dana, Yale University 1837-1892, Volume II. John Wiley and Sons, Inc., New York, 7th edition, revised and enlarged, 1124 pp.: 611-613.
"https://tamilar.wiki/w/index.php?title=அமரண்டைட்டு&oldid=249097" இலிருந்து மீள்விக்கப்பட்டது