அப்பாக்குட்டி சின்னத்தம்பி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search


அப்பாக்குட்டி சின்னத்தம்பி
அப்பாக்குட்டி சின்னத்தம்பி.jpg
முழுப்பெயர் அப்பாக்குட்டி சின்னத்தம்பி
பிறப்பு 07-09-1911
பிறந்த இடம் மானிப்பாய்,
யாழ்ப்பாணம்,
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
மருத்துவநூல்கள்
மறைவு 01-03-1986
தொழில் பேராசிரியர், மருத்துவர்
பெற்றோர் நாகமுத்து/தெய்வானைப்பிள்ளை


அப்பாக்குட்டி சின்னத்தம்பி (பிறப்பு: செப்டம்பர் 7 1911, இறப்பு: மார்ச் 1 1986) இலங்கையில் வட மாகாணம், மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மகப்பேற்று மாதர் நோய் மருத்துவத்துறை நிபுணரும், அத்துறைப் பேராசிரியரும் ஆவார். இலங்கையில் மருத்துவத் துறைக்கும் கல்வி, கலாசார வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்த இவர் மருத்துவக் கல்வியைப் பல்கலைக்கழக மட்டத்தில் தமிழ் மூலம் கற்பதற்குரிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

மானிப்பாயைச் சேர்ந்த நாகமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் புதல்வரான இவர் மானிப்பாய் இந்துக் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியினைப் பெற்றார். பின்பு மருத்துவக் கல்லூரியில் இணைந்து எல். எம். எஸ். தேர்வில் முதலாம் வகுப்பிலே தேறிச் சிறப்புப் பட்டம் பெற்றார். 1946 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பின் பொருட்டு இங்கிலாந்து சென்று அங்கு F. R. C. S. (Edin), F. R. C. S. C (Eng), M. R. Co. G. (Gr. Britan) ஆகிய தகைமைகளைப் பெற்று 1949 இல் நாடு திரும்பினார்.

மருத்துவராவும் பேராசிரியராகவும்

பின்னர் கொழும்பு பொது வைத்தியசாலையில் மாதர் நோய் மருத்துவராக நியமிக்கப்பட்டார். 1954 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழக மகப்பேற்று, மாதர் நோய் மருத்துவத்துறை இணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1960 இல் இரண்டாவது மருத்துவ பீடத்தின் சிகிச்சைத் துறை பேராதனையில் நிறுவப்பட்ட பொழுது மகப்பேற்று மாதர் நோய் மருத்துவத்துறையின் முதலாம் பேராசிரியராக அவர் நியமிக்கப்பட்டார்.

எழுதிய நூல்கள்

மருத்துவத்துறையில் இவர் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். குறிப்பாக மருத்துவத்துறையில் பயிலும் இலங்கை மாணவர்களுக்கு தமிழ்மொழியில் மருத்துவ நூல்களை எழுதி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. அவை பின்வருமாறு:

  • அயனாந்த தேச நோய் நூல் (Tropical Medicine) - 1949
  • ‘மகப்பேற்று மருத்துவம்’ - 1969
  • நலம் பேணல் விஞ்ஞானம் (Text Book of Nursing) - 1972 ஊற்றுப் பிரசுர மருத்துவ வெளியீடு
  • பிரயோக உடற்றொழிலியற் சொற்றொகுதி (தமிழ் - ஆங்கிலம்) (Glossary of Technical Terms in Applied physiology Tamil English) ஊற்றுப் பிரசுர மருத்துவ வெளியீடு 1974
  • ‘இளம் பெண்ணோயியல்’ 1982
  • ‘மூப்புற்றோர் பெண்ணோயியல்’ 1984
  • ‘நச்சுப் பாம்புகளும் அவற்றின் கடிகளும் தீர்வும்’ (Poisonous snake bites and their treatment) - 1983 காங்கேசன்துறை மருத்துவ வெளியீட்டினர் வெளியிடப்பட்டது.
  • The Diary of the Tamil University Movement ஆங்கில நூல் - 1981

உசாத்துணை

Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.