அபிராம் நந்தா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அபிராம் நந்தா
Abhiram Nanda.jpg
புல்லாங்குழல் வாசிக்கும் போது, அபிராம் நந்தா
பிறப்புஜகத்சிங்பூர், ஒடிசா, இந்தியா
தேசியம்இந்தியர்
பெற்றோர்அசோக் குமார் நந்தா
பிரகாசம்
வாழ்க்கைத்
துணை
சோனாலி மொகபத்ரா
உறவினர்கள்பிந்து நந்தா (சகோதரன்) (மஇ. மார்ச் 2023, 1)

அபிராம் நந்தா (Abhiram Nanda) என்பவர் பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற இந்தியப் புல்லாங்குழல் கலைஞர் ஆவார். இவர் பாரம்பரிய மற்றும் நவீன இசை இரண்டிலும் புல்லாங்குழல் வாசித்துவருகிறார். அரிபிரசாத் சௌராஷியா மற்றும் மோகினி மோகன் பட்நாயக் போன்ற குருக்களிடம் புல்லாங்குழல் வாசிக்க கற்றுக்கொண்டார்.[1]

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி சுமார் 53 வெளிநாடுகளிலும் புல்லாங்குழல் வாசித்து பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளார், நந்தா. பல உள்ளூர் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினர் இவரிடம் புல்லாங்குழல் வாசிக்க கற்கிறார்கள். புல்லாங்குழல் தயாரிப்பதில் வல்லவரான இவரிடம் பல வெளிநாட்டுப் புல்லாங்குழல் கலைஞர்கள் புல்லாங்குழல் பெற்றுள்ளனர்.

இளமை

அபிராம் நந்தா, அசோக் குமார் நந்தா மற்றும் காந்திலதா ஆகியோருக்கு மகனாக ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள தெரடோங்கில் பிறந்தார். இவரது தந்தை பொறியாளர் என்றாலும், புல்லாங்குழல் வாசிப்பதிலும் நடிப்பதிலும் பிரியம் கொண்டவர். இவரது சகோதரர் பிந்து நந்தா ஒரு பிரபலமான திரைப்பட நடிகர். பிந்து நந்தா கல்லீரல் தொடர்பான நோயால் மார்ச் 1, 2023 அன்று இறந்தார்.[2]

தொழில்

அபிராம் நந்தா தொண்ணூறுகளின் தொடக்கத்தில் புல்லாங்குழல் வாசிப்பவராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1995ல், கோவா இளைஞர் விழாவில் புல்லாங்குழல் வாசித்ததற்காகத் தேசிய இளைஞர் விருதை வென்றார். அரிபிரசாத் சௌராசியாவிடம் புல்லாங்குழல் கற்றுக்கொண்ட பிறகு, பல மேடை நிகழ்வுகளில் குருவுடன் புல்லாங்குழல் வாசிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இதனை தொடர்ந்து வெளிநாடுகளிலும் இசைநிகழ்ச்சிகளில் புல்லாங்குழல் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒடிசி இசை மற்றும் ஒடிசி நடனத்தில் புல்லாங்குழல் முக்கிய கருவியாக உள்ளதால் பல ஒடிசி நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நந்தா பணியாற்றியுள்ளார்.

விருதுகள்

மும்பையில் உள்ள சுர் சிங்கர் நிறுவனம் மதிப்புமிக்க சூர் மணி பட்டத்தை 2009-ல் இவருக்கு வழங்கியுள்ளது.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அபிராம்_நந்தா&oldid=9465" இருந்து மீள்விக்கப்பட்டது