அபியுக்தன் (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அபியுக்தன் இலங்கை, கொழும்பு, கல்கிசையிலிருந்து 1975ம் ஆண்டில் வெளிவந்த ஓர் மாத இதழாகும்.

ஆசிரியர்

  • எச். எம். முகைதீன்

இலங்கையில் 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த குறிப்பிடத்தக்கதோர் முற்போக்கு இசுலாமிய எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார்.

அபியுக்தன் தினகரன் பத்தியில்

இவர் 1970களின் ஆரம்பத்தில் தினகரன் தேசிய பத்திரிகையில் உதவியாசிரியராக பணியாற்றியுள்ளார். அக்காலகட்டத்தில் அபியுக்தன் எனும் 'பத்தி'யை இவர் நடத்திவந்தார். பல்சுவை அம்சங்களைக் கொண்டு வாசகர்களின் அபிமானம் பெற்ற ஒரு 'பத்தி'யாக இது விளங்கியது. தினகரனிலிருந்து விலகிய பின்பு இதே பெயரில் இவர் தனி மாத இதழ் நடத்தியமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பல இன்று புகழ்பெற்று விளங்கும் பல இசுலாமிய எழுத்தாளர்களுக்கு ஆரம்ப களம் அமைத்துக் கொடுத்த ஒரு பத்தியாக இது காணப்படுகின்றது.

உள்ளடக்கம்

அபியுக்தனில் துணுக்குச் செய்திகள், நகைச் சுவைச் செய்திகள், மினிக் கவிதை போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
  • 19ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 8, 1982)
"https://tamilar.wiki/index.php?title=அபியுக்தன்_(சிற்றிதழ்)&oldid=14686" இருந்து மீள்விக்கப்பட்டது