அபிநய் வட்டி
அபிநய் வட்டி | |
---|---|
பிறப்பு | 18 மார்ச்சு 1983 சென்னை |
பணி | திரைப்பட நடிகர் / விளையாட்டு பயிற்சியாளர் / விவசாயி |
செயற்பாட்டுக் காலம் | 2010-தற்போதுவரை |
வாழ்க்கைத் துணை | அபர்ணா (தி.2007-தற்போதுவரை) |
பிள்ளைகள் | சுவஸ்திகா அபிநய் |
உறவினர்கள் | ஜெமினி கணேசன் (தாத்தா) சாவித்திரி (பாட்டி) |
அபிநய் வட்டி (Abhinay Vaddi) என்பவர் ஒரு இந்திய நடிகர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் முதன்மையாக பணியாற்றுகிறார்.
தொழில்
தாசரி நாராயண ராவ் இயக்கிய தெலுங்கு படமான யங் இந்தியா (2010) படத்தின் மூலம் அபிநய் அறிமுகமானார்.[1] இவர் விளம்பரம் என்ற படத்தின் வழியாக தமிழில் அறிமுகமாக இருந்தார், ஆனால் படத்தில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக கணித மேதை இராமசனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட ராமானுசன் திரைப்படம் தமிழில் இவரது முதல் படமாக ஆனது.[2][3][4] தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த முக்கிய நடிகர்களைக் கொண்ட தொடர் கலைக்காணல்களுக்குப் பிறகு அவருக்கு இந்தப் பாத்திரதில் நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.[5] ராமானுசனைப் போல, அபிநய்யும் கணிதத்திலும் வல்லவர்.[6] படத்தின் ஒவ்வொரு காட்சியும் முதலில் தமிழிலும் பின்னர் ஆங்கிலத்திலும் படமாக்கப்பட்டது. வெவ்வேறு பார்வையாளர்களுக்காக இந்த பதிப்புகளுக்கு இடையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.[7] இந்தியன் எக்ஸ்பிரசின் ஒரு விமர்சகர் எழுதிய பட விமர்சனத்தில், "ராமானுசனாக திறமையான அறிமுக நடிகர் நடித்திருப்பது படத்தின் சிறப்பம்சம். நீங்கள் ராமானுசனை அபிநயிடம் காண முடியும். அவர் ஏற்று சித்தரித்த மேதையின் பாத்திரம் கிட்டத்தட்ட குறைபாடற்றது. " [8] சென்னை 600028 II இல் அபிநய் எதிர்மறை சிறப்பு பாத்திரத்தில் நடித்தார்.[9] உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான மைக்கேலாகிய நான் என்ற படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.[10] இவருடன் வசுந்தரா காஷ்யப் மற்றும் மாலோபிகா பானர்ஜி ஆகியோர் நடிக்கின்றனர் .[11] சிம்ரன் மற்றும் திரிசா நடித்த சுகர் என்ற படத்தில் அபிநய் கதாநாயகனாக நடிக்கிறார்.[12] படத்தில் இவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.[13]
தனிப்பட்ட வாழ்க்கை
இவரது தாத்தா ஜெமினி கணேசன் மற்றும் பாட்டி நடிகையர் திலகம் (மகாநடி) சாவித்திரி ஆகியோர் ஆவர்.[12]அபிநய் தேசிய அளவிலான மேசைப்பந்தாட்ட வீரராவார். தற்போது இவர் மேசைபந்தாட்டத்தில் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு மாநில மற்றும் தேசிய அளவில் பயிற்சி அளிக்கிறார். வேளாண்மையில் ஆர்வம் கொண்ட இவர் சென்னையில் சொந்தமாக வேளாண் பண்ணை நடத்தி வருகிறார். .[14][6]
இவர் ஆடை வடிவமைப்பாளரான அபர்ணாவை மணந்தார். இந்த இணையருக்கு ஸ்வஸ்திகா அபிநய் என்ற மகள் உள்ளார்.
திரைப்படவியல்
- குறிப்பில் ஏதும் குறிப்பிடப்படாதவை அனைத்தும் தமிழ் படங்களாகும்.
ஆண்டு | தலைப்பு | பங்கு | குறிப்புகள் |
---|---|---|---|
2010 | யங் இந்தியா | அபி | தெலுங்கு படம் |
2014 | ராமானுசன் | சீனிவாச இராமானுசன் | இருமொழி திரைப்படம் ( ஆங்கிலம், தமிழ்) |
2016 | சென்னை 600028 II | கணேசன் | |
2019 | விளம்பரம் | அஷ்வின் / சந்தோஷ் | |
அறிவிக்கப்படும் | மைக்கேலாகிய நான் | அறிவிக்கப்படும் | |
அறிவிக்கப்படும் | சுகர் | அறிவிக்கப்படும் |
தொலைக்கட்சி
ஆண்டு | நிகழ்ச்சி | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2021 | பிக் பாஸ் தமிழ் 5 | போட்டியாளராக | நடப்பில் |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
ஆண்டு | விருது | வகை | முடிவு | குறிப்பு |
---|---|---|---|---|
2015 | 4 வது சைமா விருதுகள் | சிறந்த அறிமுக நடிகர் | பரிந்துரைக்கப்பட்டார் | |
2015 | 9 வது விஜய் விருதுகள் | சிறந்த அறிமுக நடிகர் | Nominated |
குறிப்புகள்
- ↑ "Gemini Ganesan's grandson is new kid on the block". gulfnews.com.
- ↑ "Gemini Ganesan's grandson turns actor - Times of India". The Times of India.
- ↑ Naig, Udhav (10 July 2014). "Unveiling a reclusive genius". The Hindu.
- ↑ "'I am ecstatic to portray Ramanujan on screen'". Rediff.
- ↑ Ramanujam, Srinivasa (3 April 2015). "The boy next door comes of age". The Hindu.
- ↑ 6.0 6.1 "Math whiz plays genius Ramanujan in biopic - Times of India". The Times of India.
- ↑ "Gemini Ganesan's grandson as Ramanujan - Times of India". The Times of India.
- ↑ "'Ramanujan': Inspiring biopic, but doesn't resonate (Tamil Movie Review)". 11 July 2014.
- ↑ Subhakeerthana, S. (20 April 2016). "Abhinay plays baddie in Chennai-28 sequel!". Deccan Chronicle.
- ↑ "From biopic to physiological thriller: Abhinay Vaddi". The Hindu. 14 July 2014.
- ↑ Ramanujam, Srinivasa (11 July 2014). "Abhinay becomes Michael". The Hindu.
- ↑ 12.0 12.1 Subramanian, Anupama (18 July 2019). "Abhinay Vaddi ready to shoulder responsibility of family legacy". Deccan Chronicle.
- ↑ "I play Simran's pair, but I've more scenes with Trisha - Times of India". The Times of India.
- ↑ "Grandson of acting legends to play genius". www.telegraphindia.com.