அன்வேசா ரெட்டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அன்வேசா ரெட்டி
தேசம் இந்தியா
வசிப்பிடம்சென்னை
பிறப்பு3 செப்டம்பர் 1991 (1991-09-03) (அகவை 33)
சென்னை, இந்தியா
அதி கூடிய தரவரிசை86 (ஆகஸ்ட் 2010)
பதக்கத் தகவல்கள்

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் (குழுவிற்கு)

அன்வேசா ரெட்டி, (பிறப்பு 3 செப்டம்பர் 1991), இந்தியாவின் தமிழநாட்டைச் சேர்ந்த பெண் சுவர்ப்பந்து விளையாட்டு வீராங்கனையும், தொழில்துறை உயிரி தொழில்நுட்பம் பட்டதாரியுமாவார். [1] 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் சுவர்ப்பந்து அணியில் நான்கு பேர் கொண்ட குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்,[2]

அன்வேசா, 2005 ஆம் ஆண்டில், சுவர்ப்பந்து விளையாட்டில் தேசிய இளையோர் பட்டத்தை தனது பதினான்காம் வயதில் வென்று, இளம் வயதில் இப்பட்டம் வென்ற முதல் இந்தியப்பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். தொடர்ந்து தொழில்முறை சுவர்ப்பந்து விளையாட்டில் பங்கெடுத்து 2010 ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பெண்கள் ஒற்றையர் பிரிவில் போட்டியிட்டுள்ளார். [3] 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற மகளிர் உலக அணி சுவர்ப்பந்து  போட்டிகளிலும் கலந்து போட்டியிட்டு 86 வது தரவரிசையை அடைந்துள்ளார். அன்வேசா, சென்னையில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ்  நிறுவனத்தின் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்றுள்ளார். [4]


சென்னையில் உள்ள திரு இருதய பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்துள்ள இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழில்துறை உயிரி தொழில்நுட்பம் படிப்பில் இளங்கலையையும் படித்துள்ளார், இலண்டனில் உள்ள மன்னர் கல்லூரியில், உயிர் மருத்துவம் மற்றும் மூலக்கூறு அறிவியல் ஆராய்ச்சி படிப்பில் முதுகலை படிப்பை 2015 ஆம் ஆண்டில் முடித்துள்ளார். தற்போது சென்னையில் சுகாதாரம் சம்பந்தபட்ட துறைகளில் வேலை செய்து வருகிறார்.


மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அன்வேசா_ரெட்டி&oldid=25627" இருந்து மீள்விக்கப்பட்டது