அன்றில் (இதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அன்றில் | |
---|---|
இதழாசிரியர் | குமாரு மதிவாணன் |
துறை | |
வெளியீட்டு சுழற்சி | மாதம் |
மொழி | தமிழ் |
முதல் இதழ் | [[]] |
இறுதி இதழ் | [[]] |
இதழ்கள் தொகை | |
வெளியீட்டு நிறுவனம் | |
நாடு | ஜெர்மனி |
வலைப்பக்கம் | [] |
அன்றில் 1996இல் ஜெர்மனியில் இருந்து வெளிவந்த சஞ்சிகை. இதன் ஆசிரியர் குமாரு மதிவாணன். இது செருமானிய தமிழாலய ஆசிரியர் குமாரு. மதிவாணனால், மாணவர்களின் தமிழ்மொழி ஆற்றலையும், கலை ஆற்றலையும் ஊக்குவிக்கு முகமாக தொடங்கப்பெற்றது.
முதல் இதழ்
புதுச்சேரியில் ஒரு அன்றில் இதழ்
கடந்த 1990 தொடக்கம் இந்திய யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலம் பாகூர் என்ற சிற்றூரில் இருந்து. அன்றில் என்ற பெயரில் ஒரு இதழ் வெளிவந்தது. இந்த இதழை நடத்தியவர் புலவர். சி வெற்றிவேந்தன் என்பவர் இவரின் இயற்பெயர் சி.ஜெயபால் என்பதாகும். தொடக்கத்தில். மாத இதழாக வெளிவந்தது. பின்னர் காலாண்டு இதழாக வந்தது. தமிழ் மொழி இன நலன் சார்ந்த கருத்துகளை சுமந்து இந்த இதழ் வந்தது. புலவர் வெற்றிவேந்தனின் சொந்த ஊர் கடலூர் வட்டம் கரைமேடு என்ற சிற்றூர் ஆகும். அவர் பாகூர் அன்னுசாமி பள்ளியில் தமிழாசிரியராக பணி செய்து வந்து ஓய்வு பெற்றவர். பாகூர் அன்றில் இதழ் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 2005ம் ஆண்டில் நின்றுவிட்டது.
முகப்பட்டை
தமிழாலய மாணவி தீபாவினால் வரையப் பெற்ற ஓவியத்துடன் ஒக்டோபர் மாத (1996) சஞ்சிகை வெளிவந்தது.
உள்ளடக்கம்
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், ஓவியம் ஆகியன இடம் பெற்றுள்ளன.