அன்னி சேகர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அன்னி சேகர்
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம்
பதவியில்
2004 to 2009 – 2009 to 2014
முன்னையவர்தினாசு பத்ராவாலா
பின்னவர்இராஜ் கே. புரோகித்
தொகுதிகொலாபா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅண். 1938
இறப்பு2 அக்டோபர் 2022 (வயது 84)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பணிஅரசியல்வாதி

அன்னி சேகர் (Annie Shekhar)(பிறப்பு: 1938 - இறப்பு: 2 அக்டோபர் 2022)[1] என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசின் மூத்த உறுப்பினராக இருந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[2]

தொழில்

அன்னி சேகர் முதலில் கொலாபா மகளிர் காங்கிரசின் தலைவராகவும் பின்னர் எம். ஆர். சி. சி.யின் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பெருநகர மும்பை மாநகராட்சியில் இரண்டு முறை உறுப்பினராக இருந்தார். பின்னர் கொலாபா சட்டமன்ற உறுப்பினராக மகாராட்டிர சட்டமன்றத்தில் இரண்டு முறை உறுப்பினராக இருந்தார். 2006-09 வரை, இவர் மாநில அமைச்சர் பதவியுடன் குழந்தைகள் உதவி சங்கத்தின் தலைவராக பணியாற்றினார்.[3][4][5]

வகித்த பதவிகள்

மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்

  • 2004 முதல் 2009 வரை
  • 2009 முதல் 2014 வரை[6]

இறப்பு

அன்னி சேகர் 2 அக்டோபர் 2022 அன்று தனது 84 வயதில் இறந்தார்.[7]

மேற்கோள்கள்

  1. Mumbai: Annie Shekhar, former Congress MLA from Colaba, passes away
  2. "In Colaba, Cong mother-son duo face stiff re-election battle". indianexpress.com. Retrieved 14 August 2016.
  3. "Sitting and previous MLAs from Colaba Assembly Constituency". elections.in. Retrieved 14 August 2016.
  4. "Maharashtra 2009 Annie Shekhar (Winner) Colaba". myneta.info. Retrieved 14 August 2016.
  5. "Amid battle cry, Colaba's Cong MLA, '09 BJP runner-up fear vote division". timesofindia.indiatimes.com. Retrieved 14 August 2016.
  6. "CONGRESS MLA HAS PLANS ON GARDENS, GREENS SEE RED IN MUMBAI". dnaindia.com. Retrieved 14 August 2016.
  7. Obituary, deccanherald.com. Accessed 2 October 2022.
"https://tamilar.wiki/w/index.php?title=அன்னி_சேகர்&oldid=247420" இலிருந்து மீள்விக்கப்பட்டது