அன்னவரபு ராம சுவாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அன்னவரபு ராம சுவாமி
Annavarapu Ramaswamy.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்அன்னவரபு ராம சுவாமி
பிற பெயர்கள்அன்னவரபு
பிறப்பு23 மார்ச்சு 1926 (1926-03-23) (அகவை 98)
ஏலூரு, சோமவாரப்படு, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தொழில்கள்இசைக்கலைஞர்
Awards: பத்மசிறீ (2021)

அன்னவரபு ராம சுவாமி (Annavarapu Rama Swamy) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாரம்பரிய வயலின் இசைக்கலைஞர் ஆவார். 1926 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

தொழில்

கர்நாடக இசைத் துறையில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இவர் நன்கு அறியப்பட்டார்.[1][2][3] புதிய ராகங்கள் மற்றும் தாளங்களான வந்தன ராகம், சிறீ துர்கா ராகம் மற்றும் தினேத்ராதி தாளம் மற்றும் வேதாடி தாளம் போன்றவற்றைக் கண்டுபிடித்ததற்காக குறிப்பிடத்தக்கவராகத் திகழ்ந்தார்.[4] 2021 ஆம் ஆண்டில், கலை மற்றும் இலக்கியப் பிரிவில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதைப் பெற்றார்.மேலும் இவருக்கு 1983 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச சங்கீத அகாடமியின் உறுப்பினர் தகுதியும் வழங்கப்பட்டது.[5][4]

விருதுகள்

  • 1996 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் வழங்கும் சங்கீத நாடக அகாடமி விருது.[6]
  • 1983 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச சங்கீத் அகாடமியின் உறுப்பினர் தகுதி[5]
  • 2021 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் வழங்கும் பத்மசிறீ விருது.[4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அன்னவரபு_ராம_சுவாமி&oldid=9537" இருந்து மீள்விக்கப்பட்டது