அனுராதா கிருஷ்ணமூர்த்தி

அனுராதா கிருஷ்ணமூர்த்தி (Anuradha Krishnamoorthy) என்பார் ஒரு இந்தியச் சமூக தொழில்முனைவோர் மற்றும் பாலாடைக்கட்டி தயாரிப்பாளர். இவர் தனது சகா நம்ரதா சுந்தரேசனுடன் 2017 ஆம் ஆண்டிற்கான நரி சக்தி விருது பெற்றார்.

அனுராதா கிருஷ்ணமூர்த்தி
அனுராதா கிருஷ்ணமூர்த்தி
இயற்பெயர்/
அறியும் பெயர்
அனுராதா கிருஷ்ணமூர்த்தி
பணி பாலாடைக்கட்டி உற்பத்தியாளர் & திட்ட ஆலோசகர்
தேசியம் இந்தியா
அறியப்படுவது நாரி சக்தி விருது

தொழில்

அனுராதா கிருஷ்ணமூர்த்தி ஊனமுற்றோருடன் இணைந்து பணியாற்றும் ஒரு அமைப்பை அமைத்து, அவர்களுக்கு வேலை பெற்றுத்தருவதில் உதவினார். 2016ஆம் ஆண்டில், கிருஷ்ணமூர்த்தி சென்னையில் சமையற்கலை நிபுணர் நம்ரதா சுந்தரேசனுடன் கோஸ் பாலாடைக்கட்டி ஒன்றை நிறுவினார். இவர்கள் ஒருவருக்கொருவர் சுமார் பத்து ஆண்டுகளாக அறிந்திருந்தனர் மற்றும் அவரது புதிய வணிக கூட்டாளரின் வேலை ஒரு மூலோபாய ஆலோசனையிலிருந்தது. அவர்களின் முதல் வகை குவார்க் வகை.[1] உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தி பாரம்பரிய முறைகளைப் பின்பற்றி இயற்கை பாலாடைகளை அவர்கள் தயாரித்தனர். எடுத்துக்காட்டாக மிளகாய்ப் பொடியைப் பயன்படுத்தி செடார் சீஸ் ஒன்றை "ஓடே டூ சென்னை" என்று தயாரித்தனர். இவரது பின்னணி சமூக தொழில்முனைவோர், ஊனமுற்ற பெண்களுக்கு வேலை மற்றும் பயிற்சி அளித்தலாம். 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, கோஸ் 30க்கும் மேற்பட்ட பாலாடைக்கட்டிகளை உற்பத்தி செய்து வருகிறது.

 
அனுராத கிருஷ்ணமூர்த்தி விருது பெறுகிறார்

கிருஷ்ணமூர்த்தி மற்றும் சுந்தரேசன் இருவரும் தங்கள் தொழில்முனைவோருக்காக 2017 நாரி சக்தி விருதினைப் பெற்றனர். 2018ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாளன்று இந்தியக் குடியரசுத் தலைவர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் [2] சார்பாக இந்த விருதினை வழங்கினார், இந்த விருது இந்தியாவில் பெண்களுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும்.

மேற்கோள்கள்