அனுபமா சந்திரசேகர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அனுபமா சந்திரசேகர் (Anupama Chandrasekhar) ஒரு இந்திய நாடகாசிரியர் ஆவர். இவர் சென்னையில் பிறந்து, சென்னையிலேயே வசிக்கிறார். இவரது நாடகங்கள் இந்தியா, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளின் முன்னணி இடங்களில் அரங்கேற்றப்பட்டுள்ளன. இவர், இலண்டன் அரச கழக தேசிய நாடக நிறுவனத்தின் முதல் சர்வதேச நாடக ஆசிரியராக 2016 முதல் 2017 வரை இருந்தார். முன்பு பிசினஸ் லைனில் ஒரு பத்திரிகையாளராகவும் இருந்தார்.[1]

ஃப்ரீ அவுட்கோயிங்

இந்து ரூபசிங்கம் இயக்கிய ஃப்ரீ அவுட்கோயிங் என்ற இவரது நாடகம் 2007இல் இலண்டனில் உள்ள அரச கழக அவையின் நாடக அரங்கில் நிகழ்த்தப்பட்டது.[2] 2008 கோடையில் அரச கழக அவையின் முக்கிய அரங்கில் இது புதுப்பிக்கப்பட்டது. மேலும், அதே ஆண்டு எடின்பர்க் பிரிஞ்ச் திருவிழாவிற்கு டிராவர்ஸ் நாடக அரங்கிற்கு பயணித்தது.[3]

அனுபமா, 2008ஆம் ஆண்டில் ஈவினிங் ஸ்டாண்டர்ட் தியேட்டர் விருதின் சார்லஸ் வின்டூர் பரிசுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய நாடக ஆசிரியருக்கான இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[4] பிரீ அவுட்கோயிங் என்ற நாடகத்துக்காக ஜான் வைட்டிங் விருது [5] , சூசன் சுமித் பிளாக்பர்ன் பரிசு [6] ஆகியவற்றுக்காக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியர் இவர். இந்த நாடகம் தொராண்டோவில் உள்ள நைட்வுட் நாடக அரங்கத்தாரால் நடத்தப்பட்டது.[7] 2015இல் இந்த நாடகம் இந்தியாவில் மஹேஷ் தத்தானி இயக்கத்தில் கிரியா-சக்தியால் அரங்கேற்றப்பட்டது. 2016இல் அமெரிக்காவின் மேரிலாந்தில் சினேகல் தேசாய் இயக்கத்தில் பூம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் நிகழ்த்தப்பட்டது. [8]

டிஸ்கனெக்ட்

இவரது அடுத்த நாடகம், இந்து ரூபசிங்கம் இயக்கிய டிஸ்கனெக்ட், அரச கழக நாடக அரங்கில் நிகழ்த்தப்பட்டது.[9] டிஸ்கனெக்ட் ஜெர்மன் மற்றும் செக் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது. அதன் அமெரிக்க மற்றும் வெஸ்ட் கோஸ்ட் நிகழ்வுகள் 2013 இல் முறையே சிகாகோவின் விக்டரி கார்டன்ஸ் தியேட்டர் மற்றும் சான் ஜோஸ் ரிப்பர்ட்டரி தியேட்டரில் இருந்தன.

குழந்தைகள் நாடகம்

ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சனின் கதையின் இந்தியத் தழுவலான தி ஸ்னோ குயின் என்ற குழந்தைகளுக்கான இவரது நாடகம் இலண்டனில் உள்ள யூனிகார்ன் நாடக அரங்கத்தில் நிகழ்த்தப்பட்டது . ரோசமுண்டே ஹட் இயக்கிய இந்த நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.[10] ட்ரெஸ்டில் தியேட்டர், யுகே தயாரித்த தயாரிப்பின் ரீமவுண்ட், சென்னை மெட்ரோப்ளஸ் தியேட்டர் திருவிழாவை 2012 இல் திறந்து இந்தியா மற்றும் இங்கிலாந்தின் பல நகரங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. [11]

வென் தி குரோஸ் விசிட்

ஹென்ரிக் இப்சனின் கோஸ்ட் என்ற படைப்பால் ஈர்க்கப்பட்டு எழுதிய இவருடைய சமீபத்திய நாடகம் வென் தி குரோஸ் விசிட்,[12] இந்தியாவில் பாலியல் வன்முறை மற்றும் ஆணாதிக்க பிரச்சினையை கையாண்டது .[13] இந்து ரூபசிங்கம் இயக்கிய இந்த நாடகம் இந்தியாவின் கொடூரமான 2012 தில்லி கும்பல் வல்லுறவு மற்றும் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்களுக்கு பதில் அளித்தது. [14]

விங்ஸ் ஆஃப் வேடந்தாங்கல்

விங்ஸ் ஆஃப் வேடந்தாங்கல் என்ற இவரது சிறுகதை 2006 ஆம் ஆண்டில் காமன்வெல்த் சிறுகதை பரிசுகளில் ஆசிய வெற்றியானது. [15] பிரீ அவுட்கோயிங்கின் இவரது திரைக்கதைத் தழுவல், உட்டாவின் சன்டான்ஸ் இன்டர்நேஷனல் திரைக்கதை எழுத்தாளர் ஆய்வகத்தின் இறுதிப் போட்டியாளராக இருந்தது. இவர் 2000ஆம் ஆண்டில் அரச கழக சபை நாடக அரங்கின் சர்வதேச நாடக ஆசிரியர்கள் திட்டத்தில் இந்தியாவின் சார்லஸ் வாலஸ் அறக்கட்டளை உதவித் தொகையை வென்றார். இவர் 2015இல் சிச்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சார்லஸ் வாலஸ் அறக்கட்டளையின் எழுதும் உறுப்பினராக இருந்தார். [16]

மேற்கோள்கள்

  1. Snow, Georgia (22 September 2016). "National Theatre appoints Anupama Chandrasekhar as first international writer-in-residence". The Stage. https://www.thestage.co.uk/news/2016/national-theatre-appoints-anupama-chandrasekhar-as-first-international-writer-in-residence/. பார்த்த நாள்: 3 June 2018. 
  2. "Free Outgoing".
  3. Macmillan, Joyce. It’s Still A Man’s World, Scotsman, 11 August 2008.
  4. Jury, Louise. Donmar Dominates the London Stage at the ES Theatre Awards, Evening Standard, 24 November 2008.
  5. "Nick Hern Books | About Anupama Chandrasekhar".
  6. "Archived copy". Archived from the original on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2013-10-26.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-09-14.
  8. "Sex, lies and India: Play pits technology against tradition". 25 February 2016.
  9. "Archived copy". Archived from the original on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2013-10-26.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  10. Muthalaly, Shonali. 50 Shows and Still Going Strong, The Hindu, 2 August 2012.
  11. "Trestle Theatre. OUR WORK".
  12. "When the Crows Visit review: Triumphant and intense". 30 October 2019.
  13. "WHEN THE CROWS VISIT | Kiln Theatre".
  14. https://www.theguardian.com/stage/2019/oct/28/anupama-chandrasekhar-interview-playwright-shocking-india-Ibsen
  15. "2006 Short Story Competition". 19 October 2011.
  16. http://www.mumbaitheatreguide.com/dramas/interviews/anupama-chandrashekar-interview.asp
"https://tamilar.wiki/index.php?title=அனுபமா_சந்திரசேகர்&oldid=27500" இருந்து மீள்விக்கப்பட்டது