அனிதா மேத்தா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அனிதா மேத்தா
Anita Mehta
பிறப்புகொல்கத்தா
தேசியம்இந்தியர்
துறைகோட்பாட்டு இயற்பியல்
பணியிடங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுதுகள் இயற்பியல்
விருதுகள்உரோட்சு நிதியுதவி,இரேடுகிளிப் உறுப்பினர்,அமெரிக்க இயற்பியல் சங்க உறுப்பினர்.

அனிதா மேத்தா (Anita Mehta) இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒர் இயற்பியலாளராவார். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இலிவர்லும் அறக்கட்டளையின் வருகை பேராசிரியராகவும் பணிபுரிந்தார். [1][2][3]

வாழ்க்கை

கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்ற பின்னர் அனிதா இங்கிலாந்திலுள்ள ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட புனித கேத்தரின் கல்லுரியில் முதுநிலைப் பட்டம் பெற்றார். [4] ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் வழங்கும் உலகத்தின் மிகப் பழமையான நிதி உதவியான உரோட்சின் நிதி உதவியைப் பெற்று தத்துவார்த்த இயற்பியலில் எம்.ஏ மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். இந்த நிதியுதவியைப் பெற்ற இரண்டாவது இந்தியப் பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. [5] பின்னர் கேம்பிரிட்ச்சு கேவெண்டிசு ஆய்வகத்தில் துகள் இயற்பியல் துறையில் முன்னோடியாக பணிபுரிந்து கொண்டே பேராசிரியர் சர் சாம் எட்வர்ட்சின் வழிகாட்டுதலின் கீழ் ஓர் ஆராய்ச்சியாளராக ஐபிஎம் நிறுவனத்தில் முனைவர் பட்ட மேற்படிப்பை முடித்தார். [6] Mehta was elected India's first Radcliffe Fellow to Harvard[7]

2006 ஆம் ஆண்டு ஆர்வர்டுக்கு இந்தியாவின் முதல் இராடுகிளிஃப் நகர நிறுவனத்தின் உறுப்பினராக மேத்தா தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு அமெரிக்க இயற்பியல் சங்கத்தின் உறுப்பினர் தகுதியையும் பெற்றார். [8] உரோம் பல்கலைக்கழகம், செருமனி நாட்டின் இலீப்சிக் பல்கலைக்கழகம், பிரான்சு நாட்டின் கோட்பாட்டு இயற்பியல் நிறுவனம், மேக்சு பிளாங்க் கணித நிறுவனம்[9] முதலான நிறுவனங்களில் வருகை தரும் பேராசிரியராக இருந்துள்ளார். ஆக்சுபோர்டில் உள்ள சோமர்வில்லே கல்லூரியில் விடுப்பு கால பார்வையாளராகவும் பணியில் இருந்துள்ளார்.

எழுதிய நூல்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அனிதா_மேத்தா&oldid=25568" இருந்து மீள்விக்கப்பட்டது