அஞ்சாமை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அஞ்சாமை
Anjaamai
இயக்கம்எஸ். பி. சுப்புராமன்
தயாரிப்புஎம். திருநாவுக்கரசு எம்டி
கதைஎஸ். பி. சுப்புராமன்
இசை
  • பாடல்கள்:
  • இராகவ் பிரசாத்
  • பின்னணி இசை:
  • கலாசந்திரன்
நடிப்புவிதார்த்
வாணி போஜன்
ரகுமான்
கார்த்திக் மோகன்
ஒளிப்பதிவுகார்த்திக்
படத்தொகுப்புஇராம் சுதர்சன்
கலையகம்திருச்சித்திரம் புரொடக்சன்சு
விநியோகம்டிரீம் வாரியர் பிக்சர்சு
வெளியீடு7 சூன் 2024 (2024-06-07)
ஓட்டம்121 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அஞ்சாமை (Anjaamai) என்பது 2024 இல் இந்தியத் தமிழில் வெளிவந்த சட்டம் தொடர்பான நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம் எஸ். பி. சுப்புராமன் எழுத்து இயக்கத்தில் திருச்சித்திரம் புரொடக்சன்சு பதாகையின் கீழ் எம். திருநாவுக்கரசு எம். டி தயாரிப்பில் டிரீம் வாரியர் பிக்சர்சு வெளியிட்டது.[1] இப்படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இராகவ் பிரசாத், கலாச்சரண் ஆகியோர் பின்னணி இசையையும், கார்த்திக், இராம் சுதர்சன் ஒளிப்பதிவையும் அமைத்துள்ளனர்.[2][3]

அஞ்சாமை 2024 சூன் 7 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. [4] இத்திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. விமர்சகர்கள் திரைப்படத்தின் முன்னணி நடிகர்களின் நடிப்பு, சமூக செய்தி, உணர்ச்சிகரமான காட்சிகள், இயக்கம் போன்றவற்றைப் பாராட்டினர்.

சுருக்கம்

சர்காராக நடித்த விதார்த், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவரும் விவசாயியாக வேலை செய்பவருமாவார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மூத்த மகன் கிருத்திக் மோகன் பள்ளியில் இருக்கும்போதே மருத்துவராக வேண்டும் என்று விரும்புகிறார். இந்நேரத்தில், மருத்துவ கல்விக்காக நீட் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது. நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்களும், அவர்களது குடும்பங்களும் எதிர்கொள்ளும் சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், தனது மகனின் கனவை நனவாக்குவதற்கான சர்கார் சந்திக்கும் போராட்டங்களை இத்திரைப்படம் சித்தரிக்கிறது. மாணவர்களின் மன அழுத்தத்தையும், நீட் தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் மீது சுமத்தப்பட்ட அழுத்தத்தையும், இயக்குநர் சுப்புராமன் திறம்பட வெளிப்படுத்துகிறார்.

ரகுமானாக நடித்த சமூக ஆர்வலர் மாணிக்கத்தின் மகனுக்காக வாதிட சர்காருடன் இணைகிறார். முதல் பாதியில் தந்தை-மகன் உறவில் கதை அதிக கவனம் செலுத்துகிறது. சர்காரின் மகன் நீட் தேர்வினை எழுதுவதற்காக ஜெய்ப்பூருக்குச் செல்கிறார்.

நடிகர்கள்

  • சர்காராக விதார்த்
  • சர்காரின் மனைவி சரஸ்வதியாக வாணி போஜன்
  • வழக்கறிஞர் மாணிக்கம் வேடத்தில் ரகுமான்
  • சர்காரின் மகனான அருந்தவமாக கிருத்திக் மோகன்
  • சர்காரின் மகளாக ரேகா சிவன்
  • கே. பி. ஒய். இராமர்
  • நீதிபதி சுந்தரம் - கோ. பாலச்சந்திரன் இ.ஆ.ப. (ஓய்வு)
  • கே. பி. ஒய். குரேசி

தயாரிப்பு

திண்டுக்கல் பகுதியில் இத்திரைப்படம் விரிவாகப் படமாக்கப்பட்டது. [5]

வரவேற்பு

சினிமா எக்ஸ்பிரசின் விமர்சகர் ஒருவர் பின்வருமாறு எழுதியுள்ளார், "திறமையான நடிப்பு, சக்திவாய்ந்த சொல்லாட்சிக் கலைகளுடன் ஒரு உன்னதமான நோக்கத்தைத் தாங்கி, அஞ்சாமை, தலைப்புக்கு உண்மையாக, அவை சாமானிய மக்களால் எவ்வாறு பெறப்படும் என்பதைப் பொருட்படுத்தாமல் அதிகாரத்துவவாதிகளாலும் அரசியல்வாதிகளாலும் தயாரிக்கப்பட்ட உணர்ச்சியற்ற கொள்கைகளுக்கு எதிராக அச்சமின்றி குரல் கொடுக்கிறது."[6] தி டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சகர் ஒருவர் படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களுக்கு இரண்டு நட்சத்திரங்கள் என்று மதிப்பிட்டு "ஒட்டுமொத்தமாக, ஒரு உணர்ச்சிகரமான கதைக்களத்துடன் மிகைப்படுத்தாமல் இருப்பதற்கும் ஒரு கதையை பரபரப்பாக்குவதைத் தவிர்ப்பதற்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நினைவூட்டலாக அஞ்சாமை அமைந்துள்ளது" என்று எழுதினார்.[7] டைம்ஸ் நவ் விமர்சகர் ஒருவர் படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களுக்கு மூன்று நட்சத்திரங்கள் என்று மதிப்பிட்டு "இப்படம் ஒரு செய்தியை தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், பொழுதுபோக்கைத் தேடுபவர்களுக்கு இது பொருந்தாது. ஒரு நல்ல படம், ஒரு முறை பார்ப்பதற்கு மதிப்புள்ளது!" என்று எழுதியுள்ளார். [8]

மேற்கோள்கள்

  1. "Viddharth And Vani Bhojan's Film Titled 'Anjaamai'; An Intense First Look Revealed". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 May 2024.
  2. "Makers unveil first-look poster of Anjaamai". DT Next. 23 May 2024.
  3. "`அஞ்சாமை' டிரைலர் நாளை வெளியாகிறது". மாலை மலர். 27 May 2024.
  4. "Vidaarth's Anjaamai gets a release date". Cinema Express. 31 May 2024.
  5. "Anjaamai Not A Film That Offers Solutions: Director SP Subburaman". News18. 1 June 2024.
  6. Kumar, Akshay (7 June 2024). "Anjaamai Movie Review: A commendable political drama that hits out at chinks in the academia". சினிமா எக்ஸ்பிரஸ். பார்க்கப்பட்ட நாள் 11 June 2024.
  7. Radhakrishnan, Roopa (7 June 2024). "Anjaamai Movie Review : Too much melodrama and sensationalisation bring down this film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 11 June 2024.
  8. KR, Manigandan (6 June 2024). "Anjaamai Review: Vani Bhojan, Vidaarth Shine In This Film On NEET". டைம்ஸ் நவ். பார்க்கப்பட்ட நாள் 11 June 2024.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அஞ்சாமை&oldid=29920" இருந்து மீள்விக்கப்பட்டது