அஞ்சனா (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அஞ்சனா
Anjana
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1988-1997

அஞ்சனா (Anjana) கன்னடத் திரைப்படங்களில் தனது பாத்திரங்களுக்காக அறியப்படும் இந்திய நடிகையாவார். 1990களின் முற்பகுதியில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருந்த இவர், 20 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

தொழில் வாழ்க்கை

அஞ்சனா சபரிமலே சுவாமி அய்யப்பன் (1990) திரைப்படத்தில் அறிமுகமானார். இவரது திருப்புமுனை திரைப்படம் அஜகஜந்தரா (1991). [2] ஒண்டு சினிமா கதே (1992) கடமாரி ஹென்னு கிலாடி கண்டு (1992) நிஷ்கர்ஷா (1993) ஆதங்கா (1993) ஜானா (1994) போன்ற வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்தார். இவரது மற்ற குறிப்பிடத்தக்க நடிப்புகளில் போலிசெனா கென்தி (1991) மேகா மந்தரா (1992) ரோசகரா (1992-) லூட்டி கேங் (1994), பங்கரதா கலசா (1995) ஆகியவையாகும்.[3] 1997 இல் திரைப்படங்களிலிருந்து விலகிய இவர், கடைசியாக எனூண்ட்ரே (1997) திரைப்படத்தில் தீரேந்திர கோபாலின் பேத்தியாக நடித்தார். மும்பையில் வசித்து வருகிறார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அஞ்சனா_(நடிகை)&oldid=22279" இருந்து மீள்விக்கப்பட்டது