அஜியாக்கோ
பொகோட்டா நகரின் சிறப்பு உணவுகளுள் ஒன்றான அஜியாக்கோ | |
| வகை | சூப் |
|---|---|
| தொடங்கிய இடம் | கொலம்பியா, கியூபா, பெரு |
| முக்கிய சேர்பொருட்கள் | உருளைக் கிழங்கு |
அஜியாக்கோ (Ajiaco) (எசுப்பானிய ஒலிப்பு: [aˈxjako]) என்பது கொலம்பியா, கியூபா மற்றும் பெரு போன்ற நாட்டு மக்கள் விரும்பி சாப்பிடும் ஒரு வகையான சூப் ஆகும்.[1][2] இது எந்த நாட்டில் முதலில் பயன்படுத்தினர் என்பது அறிஞர்களுக்கு விவாதப்பொருளாகவே இருந்து வருகிறது. கோழி இறைச்சி, மூன்று வகையான உருளைக்கிழங்கு மற்றும் சில மூலிகை பொருட்களை வைத்து இந்த சூப்பைத் தயாரிக்கிறார்கள். கியூபாவில் இதனைக் கட்டியான குழம்பாக தயாரிக்கிறார்கள்.
வரலாறு
இந்த உணவு எந்த நாட்டில் தோன்றியிருக்கலாம் என அறிஞர்கள் விவாதித்து வருகின்றனர்.[1] கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி ஆல்பிரடோ சயாஸ் அல்போன்சோ அஜியாக்கோவைப் பற்றி குறிப்பிடும் போது இது ”அஜி” என்ற இரையினோ மொழியிலிருந்து பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் என்று எழுதியுள்ளார்.[3] ”அஜி” என்பதற்கு இரையினோ மொழியில் ”காரமான மிளகு” என்று பெயர்.
16 ஆம் நூற்றாண்டில் தான் அஜியாக்கோ கியூபா நாட்டில் பிரபலமானது, குறிப்பாக கிராமப்புற மக்கள் அதிகமாகப் பயன்படுத்தியிருந்தாலும் உயர்குடி மக்களும் சில சமயங்களில் அதனைப் பயன்படுத்தினர்.[4]
தயாரிப்பு

கொலம்பியா
அஜியாக்கோ கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில், பிரபலமான ஒரு உணவுப்பொருள். கோழி, மூன்று வகைகளில் உருளைக்கிழங்கு, மற்றும் மூலிகைபொருட்களைப் பயன்படுத்தி இதனைத் தயாரிப்பார்கள்.[5][6]
கியூபா
கியூபா நாட்டில் பன்றி இறைச்சி, கோழி, காய்கறிகள், மற்றும் பல்வேறு மாவு மற்றும் கிழங்குகளைப் பயன்படுத்தி இதனைத் தயாரிப்பார்கள்.[1][7]
பெரு
பெரு நாட்டில்அஜியாக்கோவை மிகவும் வித்தியாசமான உணவாக தயாரிப்பார்கள். உருளைக்கிழங்கு , சமைத்த பூண்டு, உலர்ந்த மஞ்சள் மற்றும் சிவப்பு மிளகாய் , அரிசி மற்றும் சுண்டவைத்த கோழி அல்லது முயல் ஆகியவற்றைப் பயன்படுத்திச் சுவையாகத் தயாரிப்பார்கள்.
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 "Cuban Ajiaco Recipe". Tasteofcuba.com. Retrieved 2014-06-03.
- ↑ Clark, Melissa (October 28, 2011). "From Colombia, the Ultimate One-Pot Meal". த நியூயார்க் டைம்ஸ். Accessed April 2016.
- ↑ "Ajiaco cobrero" (in Spanish). Ecured.cu. Retrieved 2014-06-03.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Emblematic dish: the ajiaco | Cubanow". Archived from the original on 2014-06-06. Retrieved 2017-06-28.
- ↑ "Ajiaco Bogotano (Colombian Chicken and Potato Soup)". Mycolombianrecipes.com. 2009-03-19. Retrieved 2014-06-03.
- ↑ "Eatocracy". CNN. Retrieved 2022-08-01.
- ↑ Garth, Hanna. 2013 Food and Identity in the Caribbean. Bloomsbury Press.