அசுவினி ஐயர் திவாரி
அசுவினி ஐயர் திவாரி Ashwiny Iyer Tiwari | |
---|---|
2018 ஆம் ஆண்டில் அசுவினி ஐயர் திவாரி | |
பிறப்பு | 15 அக்டோபர் 1979 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பணி | |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
வாழ்க்கைத் துணை | நித்தேசு திவாரி |
பிள்ளைகள் | 2 |
அசுவினி ஐயர் திவாரி (Ashwiny Iyer Tiwari) (பிறப்பு அக்டோபர் 15 1979) என்பவர் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் (திரைப்படம்) ஆவார்.சில ஆண்டுகள் தொலைக்காட்சி விளம்பரங்களில் பணிபுரிந்தார். அதன் பிறகு நில் பட்டே சன்னட்டா எனும் நகைச்சுவைத் திரைப்படத்தை 2016 இல் இயக்கினார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததனால் அம்மா கணக்கு என்ற பெயரில் தமிழ் மொழியில் திவாரி இயக்கினார். இதனை தனுஷின் உண்டர்பார் நிறுவனம் தயாரித்தது. 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிலிம்பேர் விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த இயக்குநருக்கான விருதை "பேரெய்லி கி பர்ஃபி" எனும் நகைச்சுவைத் திரைப்படத்திற்காகப் பெற்றார்.
ஆரம்பகால வாழ்க்கை
அசுவினி ஐயர் அக்டோபர் 15, 1979 இல் தமிழ் இந்து சமயக் குடும்பத்தில் பிறந்தார். பின் மகாராஷ்டிராவிலுள்ள மும்பையின் புறநகர்ப்பகுதியான முலுண்டுவில் வாழ்ந்து வந்தார். இவர் புனித மேரி கான்வென்ட் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின் எஸ் ஐ இ எஸ் கல்லூரியில் வணிகம், பொருளாதார பிரிவில் பட்டம் பெற்றார். கலையின் மீது கொண்ட ஆர்வத்தினால் தனது தாயை சமாதானம் செய்து கலைப் பள்ளியில் சேர்ந்தார். இவரது தாய் லட்சுமி சுப்ரமணியன் முலுண்டுவில் உள்ள எஸ். எம். பி. ஆர் பள்ளியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அசுவினியின் கணவர் நிதிஷ் திவாரியும் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ஆவார்.[1][2]
தொழில் வாழ்க்கை
விளம்பரம்
மும்பையிலுள்ள சோபியா தொழில்நுட்பப் பயிலகத்தில் வணிக விளம்பரத்திற்காகப் தங்கப் பதக்கம் பெற்றார். இந்தியாவிலுள்ள லியோபர்னட் விளம்பர நிறுவனத்தில் சுமார் பதினைந்து ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக படைப்பாற்றலுக்கான கேன்ஸ் லயன்ஸ் சர்வதேச விருது, நியூயார்க் நகர திருவிழா விருது, ஒன் ஷோ விருது, புரோமக்ஸ் விருது மற்றும் கோவா திருவிழா விருதுகளைப் பெற்றுள்ளார். திரைப்படங்களை இயக்கத் துவங்கிய பிறகு லியோ பர்னட் நிறுவன வேலையில் இருந்து விலகினார்.[3]
திரைப்படம்
இவர் இயக்கிய பேரெய்லி கி பர்ஃபி எனும் நகைச்சுவைத் திரைப்படத்திற்காக 2017 ஆம் ஆண்டு ஜீ தொலைக்காட்சியின் சினிமா விருது நிகழ்ச்சியில் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார். இவர் இயக்கிய முதல் குறும்படமான காலை உணவு என்ன? (வாட்ஸ் ஃபார் பிரேக்ஃபாஸ்ட்) 2012 ஆம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது வென்றது. இவரின் முதல் திரைப்படமான நில் பட்டே சன்னட்டா எனும் நகைச்சுவைத் திரைப்படத்தை 2016 இல் இயக்கினார். இதில் ஸ்வரா பாஸ்கர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[4][5][6]. தெ நியூ கிளாஸ்மெட் (புதிய தோழன்) எனும் பெயரில் சர்வதேச அளவில் இந்தத் திரைப்படம் வெளியானது. மேலும் வணிக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் சீர்தூக்கிப் பார்க்கும் சிக்கல் மிகுந்த கதைக்காகவும், அதனைக் கையாண்ட விதத்திற்காகவும் இவர் புகழப்பட்டார்.[7] பின் அதே ஆண்டு ஜூன் 24 இல் இந்தக் கதையினை தமிழ் மொழியில் அம்மா கணக்கு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர்.[8][9]
2016 ஆம் ஆண்டில் நில் பாட்டே சன்னதா எனும் திரைப்படத்தை இயக்கினார்.[10] இதனை ராஞ்சனா திரைப்படத்தை இயக்கிய ஆனந்த். எல். ராயின் கலர் எல்லோ நிறுவனத்துடன் ஜார் பிக்சர்ஸ் மற்றும் ஆப்டிகஸ் இன்க் நிறுவனம் தயாரித்தது. எராஸ் நிறுவனம் இதனை வெளியிட்டது.[11]
இந்தியாவில் உள்ள பெமினா இதழ் நடத்திய ஓட்டெடுப்பில் 2016 இன் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இவர் தேர்வானார். 2016 ஆம் ஆண்டு டெட் மாநாட்டில் பேசுவதற்கு அழைப்பு விடுத்தனர்.
மேற்கோள்கள்
- ↑ "Working with Aamir Khan dream come true for any director: Ashwini Iyer Tiwari". The Indian Express. 2016-04-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-21.
- ↑ "Advertising's classic love stories: Nitesh Tiwari and Ashwiny Iyer Tiwari, Marketing & Advertising News, ET BrandEquity". Brandequity.economictimes.indiatimes.com. 2016-02-09. பார்க்கப்பட்ட நாள் 2017-04-21.
- ↑ "Ashwiny Iyer Tiwari bids adieu to Leo Burnett". Afaqs.com. பார்க்கப்பட்ட நாள் 2017-04-21.
- ↑ "Swara Bhaskar, director Ashwiny Iyer Tiwari talk Nil Battey Sannata | more lifestyle". Hindustan Times. 2016-04-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-21.
- ↑ "Screen Awards: Salman Khan and Shah Rukh co-host; Deepika presents 'Lifetime Achievement' to Rekha". Firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 2017-04-21.
- ↑ "Grateful to Aanand L. Rai: 'Nil Battey Sannata' director Ashwini Iyer Tiwari". The Indian Express. 2016-05-19. பார்க்கப்பட்ட நாள் 2017-04-21.
- ↑ BBala (2015-09-27). "Swara Bhaskar wins best actress title in China". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2017-04-21.
- ↑ "Dhanush persuaded Ashwiny to make Amma Kanakku". Deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 2017-04-21.
- ↑ "Ashwiny Iyer Tiwari on Nil Battey Sannata, star cast and more". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-21.
- ↑ "Nil Battey Sannata Movie Box office collection report 2016". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2017-04-21.
- ↑ Share on FacebookShare on Twitter. "Swara Bhaskar: 'Nil Battey Sannata' trailer launched ". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2017-04-21.
{{cite web}}
:|author=
has generic name (help)