அங்கிடி செட்டியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அங்கிடி செட்டியார்
இந்தியப் பெருங்கடலின் ஆணை,
பிரித்தானியப் பேரரசின் ஆணை
மொரிசியசின் துணை அதிபர்
பதவியில்
24 ஆகத்து 2007 – 15 செப்டம்பர்r 2010
குடியரசுத் தலைவர் அனெரூட் ஜக்நாத்
முன்னவர் இரௌப் பந்தன்
பின்வந்தவர் மோனிக் ஓசான் பெல்லிபியாவ்
பதவியில்
1 சூலை 1997 – 17 பிப்ரவரி 2002
குடியரசுத் தலைவர் காசம் உதீம்
முன்னவர் இரவீந்திரநாத் குருபரன்
பின்வந்தவர் இரௌப் பந்தன்
மொரிசியசின் துணைக் குடியரசு தலைவர், (பொறுப்பு)
பதவியில்
15 பிப்ரவரி 2002 – 18 பிப்ரவரி 2002
பிரதமர் அனெரூட் ஜக்நாத்
முன்னவர் காசம் உதீம்
பின்வந்தவர் அரி ரங்க பிள்ளை (பொறுப்பு)
தனிநபர் தகவல்
பிறப்பு (1928-04-29)29 ஏப்ரல் 1928
அருப்புக்கோட்டை, மதுரை, தமிழ்நாடு, பிரித்தானிய இராச்சியம் (தற்போது இந்தியா)
இறப்பு 15 செப்டம்பர் 2010(2010-09-15) (அகவை 82)
அரசியல் கட்சி மொரிசியசு தொழிலாளர் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) திருமதி செட்டியார்
தொழில் பார் அட் லா

அங்கிடி வீரைய செட்டியார் (Angidi Verriah Chettiar ) (29 ஏப்ரல் 1928 - 15 செப்டம்பர் 2010) மொரிசியசின் அரசியல்வாதியான இவர், தான் செப்டம்பர் 2010 இல் இறக்கும் வரை மொரிசியசின் துணை குடியரசு தலைவராக இரண்டு முறை பணியாற்றினார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை

இவர் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் பிறந்தார். இவர் தனது 10 வயதில் மொரிசியசுக்கு வந்தார்.. இவரது குடும்பத்தினர் வர்த்தகர்கள் ஆவர்.

அரசியல் வாழ்க்கை

இவர் தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் மொரிசியசு தொழிலாளர் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் பணியாற்றிய இவர், சில தசாப்தங்களாக கட்சியின் பொருளாளர் பதவியை வகித்தார். மொரிசியசின் துணைத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, இவர், பல ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அரசாங்க தலைமை கொறடாவாகவும், இறுதியில் பிரதமர் சர் சிவசாகர் ராம்கூலம் அரசாங்கத்தில் 1980 முதல் 1982 வரை அமைச்சராகவும் பணியாற்றினார்.

1997 முதல் 2002 வரை முதல் முறையாக துணைகுடியரசு தலைவராக பணியாற்றினார். மேலும் 2002 ஆம் ஆண்டில் காசம் உதீம் பதவி விலகியபோது இவர் சில காலம் பொறுப்பிலிலுருந்தார். இருப்பினும், சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவில் கையெழுத்திட மறுத்து இவர் பதவி விலகினார். இந்த மசோதா முஸ்லிம்களுக்கு பாரபட்சமானது என்று கூறினார். அதன்பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியான அரி ரங்க பிள்ளைக்கு குடியரசு தலைவர் பதவி வழங்கப்பட்டது.

தற்போதைய மொரிசியசு தொழிலாளர் கட்சியின் தலைவரான நவின்சந்திரா ராம்கூலம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, இவர் இரண்டாவது முறையாக மொரிசியசின் குடியரசு தலைவர் அனெரூட் ஜக்நாத்த்தால் 2007 இல் மொரிசியசின் துணைக் குடியரசு தலைவரக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

2010 செப்டம்பர் 15 அன்று துணைக் குடியரசு தலைவராக பணியாற்றியபோது இவர் இறந்தார்.[2] இவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டார். இவருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மற்றொரு மகன் ஏற்கனவே இறந்துவிட்டார்.

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அங்கிடி_செட்டியார்&oldid=26262" இருந்து மீள்விக்கப்பட்டது