அங்காரகன் (2023 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அங்காரகன்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்மோகன் தச்சு
தயாரிப்புஜீனா ஜோமோன்
ஜோமோன் பிலிப்
கதைகருந்தேள் இராஜேஷ்
Sreepathy
இசைகு. கார்த்திக்
நடிப்பு
  • ஸ்ரீபதி கே. ஏ
  • சத்யராஜ்
  • நியா சங்கரத்தில்
  • ரெய்னா கரத்
ஒளிப்பதிவுமோகன் தச்சு
படத்தொகுப்புமதுரை வளர் பாண்டியன்
கலையகம்ஜூலியன் & ஜெரோமா பிலிம் கம்பெனி
பிரைம்ரோசு எண்டர்டெயின்மெண்ட்
விநியோகம்உத்ரா புரொடக்சன்சு
வெளியீடு8 செப்டம்பர் 2023 (2023-09-08)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அங்காரகன் (Angaaragan) 2023 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். மோகன் தச்சு எழுதி இயக்கிய இப்படத்தில் சிறீபதி கே.ஏ., சத்யராஜ், நியா சங்கரத்தில், ரெய்னா கரத், அப்புக்குட்டி ஆகியோர் நடித்திருந்தனர். ஜூலியன் & ஜெரோமா பிலிம் கம்பெனி, பிரைம்ரோசு எண்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றின் கீழ் ஜீனா ஜோமோன், ஜோமோன் பிலிப் ஆகியோர் இப்படத்தை தயாரித்திருந்தனர். [1]

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படம் இயக்குநர் மோகன் தச்சுவுக்கு அறிமுகத் திரைப்படம்.[2] படத்தின் தயாரிப்பாளர்கள் சத்யராஜ் எதிர்மறையான பாத்திரத்தில் நடிப்பார் என்று அறிவித்திருந்தனர் [3] இத்திரைப்படம் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவினால் யூ/ஏ சான்றிதழைப் பெற்றது.[4]

வரவேற்பு

இத்திரைப்படம் 2023 செப்டம்பர் 8 அன்று வெளியிடப்பட்டது.[5] கதையின் பெரும்பகுதி இரவில் நடப்பதால், இயக்குநர் மோகன் தச்சு காட்சிகளை நன்றாகப் படமாக்கியிருப்பதாகவும், இசையமைப்பாளர் கே.கார்த்திக் இரசிகர்களை ஓரளவிற்கு பயமுறுத்த முயற்சிக்கிறார் என்றும் மாலை மலரின் விமர்சகர் ஒருவர் எழுதியுள்ளார்.[6] தந்தி டிவி ஒரு விமர்சகர் கலவையான விமர்சனத்தை வழங்கியிருந்தார்.[7]

மேற்கோள்கள்

  1. "ஹாரர் த்ரில்லராக உருவாகும் அங்காரகன்". 2023-03-28. பார்க்கப்பட்ட நாள் 2023-08-17.
  2. "2 நாயகிகள் அறிமுகமாகும் அங்காரகன்". 2023-03-28. பார்க்கப்பட்ட நாள் 2023-08-17.
  3. "மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கும் நடிகர் சத்யராஜ்". 2022-12-16. பார்க்கப்பட்ட நாள் 2023-08-17.
  4. "Sathyaraj's Angaaragan clears censorship formalities". 2023-05-26. பார்க்கப்பட்ட நாள் 2023-08-17.
  5. "Sathyaraj's Angaaragan gets release date". 3 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-03.
  6. "அங்காரகன்". 2023-09-07. பார்க்கப்பட்ட நாள் 2023-09-08.
  7. "மீண்டும் வில்லனாக களமிறங்கிய சத்யராஜ் 'அங்காரகன்' படம் எப்படி இருக்கு..?". 2023-09-08. பார்க்கப்பட்ட நாள் 2023-09-08.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அங்காரகன்_(2023_திரைப்படம்)&oldid=29864" இருந்து மீள்விக்கப்பட்டது