அக்தர் மொகியுதின்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அக்தர் மொகியுதின்
Akhtar Mohiuddin
பிறப்புகுலாம் மொகியுதின் வானி
(1928-04-17)17 ஏப்ரல் 1928
சிறிநகர், சம்மு காசுமீர்
இறப்பு2001 (அகவை 72–73)
பணிகாசுமீரி மொழி நாவலாசிரியர், நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை ஆசிரியர்
அறியப்படுவதுநவீன காசுமீரி இலக்கியத்தை வளர்த்தவர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சத் சங்கர் சன்சால் சிறுகதைகள்;
தாடு தேகு நாவல்
விருதுகள்சாகித்திய அகாதமி விருது (1958)

அக்தர் மொகியுதின் (Akhtar Mohiuddin) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். காசுமீரி மொழியில் எழுதிய நாவலாசிரியர், நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார். 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதியன்று சிறீநகரில் பிறந்தார். இவரது இயற்பெயர் குலாம் மொகியுதின் வானி என்பதாகும். நவீன காசுமீரி இலக்கியத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார். தோடு தாக் என்ற இவரது நாவல் காசுமீரி மொழியில் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட முதல் நாவலாகக் கருதப்படுகிறது. சத் சங்கர் என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 1958 ஆம் ஆண்டு அக்தருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.[1][2]

அக்தர் மொகியுதின் ஆரம்பத்தில் உருதுவில் எழுதினார். சத் சங்கர் மற்றும் சோன்சல் என்பவை இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்புகளாகும். சில நாடகங்களையும் எழுதினார். மனித இயல்பைச் சித்தரிப்பதும், மனித இயல்பைக் கையாளுவதும் இவரது எழுத்துக்களின் முக்கிய அம்சங்களாகும். இந்திய அரசு இவருக்கு 1968 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருதை வழங்கியது.[3] "காசுமீரின் தேசிய நாயகனாக" கருதப்பட்ட மக்பூல் பட் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்மசிறீ விருதை அக்தர் திருப்பி அளித்தார்.[4][5]

அக்தர் மொகியுதின் 2001 ஆம் ஆண்டில் காலமானார்.

மேற்கோள்கள்

மேலும் வாசிக்க

"https://tamilar.wiki/index.php?title=அக்தர்_மொகியுதின்&oldid=19033" இருந்து மீள்விக்கப்பட்டது